பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 97

யிரத்திற்கும் மேற்பட்ட பண் வகைகளும், நூற்று எட்டுத் தாளவகைகளும், தொண்ணுற்றாருக்கும் மேற்பட்ட சந்த வகைகளும் கொண்ட-முழுக்க முழுக்கப் பனுவல்களே நிறைந்த, பண்டைய நாடகக் கலையைப் பொதுமக்கள் ரசிக் கத்தான் முடியுமேதவிர, அவற்றில் வல்லுநராவதென்பது இயலாத செயலாகும்.

கலைஞன் ரசிகனாக இருக்கலாம். ஆனால் ரசிகர்கள் எல்லோரும் கலைஞர்களாக இருப்பதென்பது முடியாது. அது அவசியமும் இல்லை.

மேலும், நாடக இலக்கியங்களை நூல் வடிவினால் பரவ லாகப் படிவங்கள் எடுக்க அச்சியந்திர சாதனங்களோ, காகிதம் போன்ற வசதிகளோ இல்லாத அக்காலத்தில், நாடக ஆசிரியன், பனை ஓலையில் பொறிக்கப் பெற்ற ஒரே ஒரு ஒலைச் சுவடியை வைத்துக் கொண்டு, நாடக நடனக் கலையில் ஈடுபடும் கலைஞர்களுக்குச் செவிவழிச் செல்வமாக ஓதி உணர்த்தியே பயிற்சியளித்திருக்க வேண்டும்.

அவ்வண்ணம் ஓதி உணர்த்தியதன் மூலம் பயிற்சியில் தேர்ச்சிபெற்ற சிறந்த கலைஞர்கள், அந்த முறையிலேயே தங்களுக்குப்பின் தோன்றும் கலைச்சந்ததியினருக்கும் வழி வழியாகப் பயிற்சி தந்து, கலைஞர்களை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

அத்தகைய நாடக நடன அல்லது கூத்துவகைகளுக் கான கதையின் கருப்பொருள், பெரும்பாலும் தங்களின் மூதாதையர்களின் பெருமைகளை விளக்குவனவாகவும், போர்க்களத்தில் மாற்றானை வெற்றிகண்டு மீண்ட தங்கள் மன்னனின் வீர சாகசங்களை விளக்குவனவாகவும், அந்தப் போரில் தோல்வி கண்ட வேற்றரசர்களின் வீழ்ச்சியை நகைச்சுவையாக நடித்துக் காட்டி மக்களையும் மன்னனை யும், மகிழ்விப்பனவாகவும், வெற்றிக்குப்பின் அமைதிக்கு வழி காட்டுவனவாகவும் இருந்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.