பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தமிழ் நாவலர் சரிதை


வெண்பா

புக்கு விடை தழுவிக் கொண்டுழுத புண்ணெல்லாந் திக்கிலுறை காளிங்கன் றென்புழன்மான்-அக்கணமே தோள்வேது கொண்டிலளேற் சுந்தரப்யொற் றோன்றலுக்கு வாழ்வே துங் கொண்டிலமே மற்று. 95

{{{rule}|இது, கம்பர் அப்போது வல்லி வீட்டுக்கு எருமை வாங்கிலாப் போய் காளிங்கன் நிரைகள் மேய்ப்பானைக் கண்டு அவன் பேரிற் பாடிய பாட்டுச் சொல்ல அவன் ஈன்ற எருமை ஆயிரங்கொடுத்த பாட்டு}}. - -

குறிப்பு : கம்பர் திருவொற்றியூர்த் தேவரடியாள் வல்லியென் பலன் வீட்டில் இருக்கையில் அவள் தனக்குப் பால் பொருட்டு ஈன்ற எருமை - வேண்டுமென்றுளாக, அவர் புழலென்னுமூரில் - மிக்க 'எருமையுடையவனான ஆயன்: காளிங்கன் என்பானைக் கண்டு இப் பாட்டைப்பாடித் தனக்கு. ஈன்ற எருமை வேண்டு மென்றனர் எனவும், அவன் மகிழ்ந்து கன்றீன்ற எருமை ஆயிரம் தந்தானெனவும் கூறுவர், புழல் என்பது திருவொற்றி யூருக்கு மேற்கிலுள்ளதோரூர். தொண்டை நாட்டுக் கோட்டம் இருபத்து நான்கனுள் இது புழற் கோட்டத்தின் தலைநகராகும் திருவொற்றியூரும் அக்காலத்தே புழற் கோட்டத்தைச் சேர்ந் திருந்தது: (A. R. NC 367 of 1911) கருதிய பெண்ணை மணக்க' வேண்டி, அவள் பெற்றோர் குறிக்கும் கொல்லேற்றைத் 'தழுவிபடக்குவது பண்டை நாளை ஆயர் முறை. இதனை முல்லைக் கலித்தொகையிற் காணலாம். ' திக்கில் உறை காளிங்கன் . நான்கு திக்கிலும் புகழ் பரவி நிற்கும் காளிங்கன். காளிம்பன் - என்றும் பாட வேறுபாடுண்டு, மான் - மான்போலும் அவன் காதலி, தோள் வேது - கொண்டிலளாயின் - தன் மார்பகம் பொருந்தித் தழுவித் தன் கொங்கையின் வெம்மையால் ஒற்றி நோய் நணித்திவளாயின். முயங்கிப் பொதிவேம் முயங்கிப் பொதிவேம், முலைவேதி னொற்றி முயங்கிப் பொதிவேம், கொலை யேறு சாடிய புண்ணையெங்கேளே (முல்லைக்கலி, க.) என வரும் ஆய்மகள் பாட்டுக் காண்க. தோன்றல் - தலைவன்.