பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தொல்காப்பிய தேவர் வெண்பா வேத மொழிவிசும்பு மேனி சுடர்விழிமண் பாதங் திருப்பா திரிப்புலியூர்-நாகர் புரமாம் பரமாம்படுகடலெண் டிக்குங் காமா மவர்க்குயிர்ப்பாங் கால். 108. இது தொல்காப்பியதேவர் சமணர் கோயிலுக்குச் செங்கலனுப் பிக்கச் சிவதலத்தார் தங்களெல்லை யென்றபோது பாடியது. குறிப்பு: தொல்காப்பிய தேவரென்பவர் இடைக்காலத்தில் வாழ்ந்த புலவர். ஒருகால் இருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த சம ணர் தங்கள் கோயிலுக்குச் செங்கல் அறுக்கவேண்டி ஒரு கிலத்தை வேலையாட்களுக்குக் காட்டினர். அது சிவன் கோயி. லுக்குரியதென அக் கோயிலார் கூறினர். நடுகின்ற தொல் காப்பிய தேவர் சிவன் கோயிலார் கூறுவதுண்மையாதல் கண்டு இப் பாட்டைப் பாடினர். இதன் நலங்கண்ட சான்ருேர் இதனே யுட்கொண்டே கலம்பகமொன்று பாடுமாறு அவரை வேண்ட, அவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகத்தைப் பாடினர். இது மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரால் வெளி யிடப்பட்டுள்ளது. அதன் கண் இஃது இரண்டாம் பாட்டு. சுடர் விழி - ஞாயிறு, கிங்கள், இ என்ற முச்சுடரும் கண்கள். மண் பாதம் - கிலம் திருவடியாம். நாதர் - காதருக்கு. பரம அம்பர மாம் படுகடல் - மேலான ஆடையாகும் ஒலிக்கின்ற கடல், எண் திக்கும் கரம் - எட்டுத் திசைகளும் அவர்க்கு எட்டாகிய தோள் கள். கால் - காற்று. பாதம்புவனி யென்று தொடங்கும் பொன்வண்ணத் தந்தாதியும், மாநிலஞ் சேவடியர்க' என்ற நற்றினேச் செய்யுளும் ஈண்டு ஒப்புநோக்கற் குரியன.