பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கக கருது கற் கிடமுண்டாகிறது. நாட்டின் பொது வரலாற்றறிவு பெறற்கு வாய்ப்பில்லாமையால் கால முறையில் சில வழுவாயினும், தொகுத்திருக்கும் முயற்சி குறித்து இதன் தொகுப்பாசிரியர் பாராட் டத்தக்கவரென்பது யாவரும் உடன்படக்கூடிய தொன்று. - தொடக்கத்தே தொகுக்கப் பெற்றிருக்கும் உயர்ந்த பாட்டுக்களைப் படிப்பார்க்கு இடையில் காணப்படும் சில பாட்டுக்கள் விலக்கப்பட்டிருப் பின் பாட்டு வகையில் இத்தொகை நூல் மிக்க அழகுபெற்றிருக்கும். பாடத்தகாத சில கருத்துக் களும், கோக்கத் தகாத சில கொச்சை மொழி களும் கொண்ட பாட்டுக்கள் இதன் கண் உள்ளன. பெயர் தெரியாக சில புலவர் பாட்டுக்களும் இச் சரிதை 'க்கண் சேர்ந்திருக்கின்றன. எனினும்: இந்நூலைத் தொகுத்த ஆசிரியர் யாது கருதி இவற் றைச் சேரக்கோத்தாரென்பது விளங்கவில்லை. - يحة தமிழ்நாவலர் சரிதையைத் தோகுத்த ஆசிரியர் பெயர் தெரிந்திலது. ஆயினும், இந்நூற்கண் தொகுத்திருக்கும் காப்புச் செய்யுளேயும் இறை யனர் முருகவேள் முதலாயினேர் பாட்டுக்களையும் தொடக்கத்தில் வைத்திருப்பது கொண்டு, அவர் ஒரு சைவரென்பது தெளிவாகிறது. இதன் இறு தியில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் சரிதை' யைக் கோத்திருத்தலால், இதன் ஆசிரியர், பதின. மும் நூற்றுண்டிற்குப் பின்னர்த் தோன்றி இக் திருப்பணியைச் செய்தாரென்று கொள்ளலாம்.