பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஒட்டக்கூத்தர் - கட்டளைக் கலித்துறை நடித்தது நச்சர வுச்சியி னுச்சி மதிலிலங்கை பிடித்தது வென்ற திருபது தோள்பதி னெண்பகலெ முடித்தது பாரதம் வீரப் புலிவைப்ப மூரிச்செண்டால் அடித்தது பொற்கிரி விக்ரம சோழ வகளங்கனே.120 இது, சாசுவதி தம்பலங்கொடுக்கக் கவிதையுண்டாகிய கூத்த முதலியாாை, அரும்பைத் தோள்ளாயிரம் பாடும்போது, விக்கிரமசோழன் கேட்டு ஒரு கவியை யொட்டச் சொல் லென்று சொன்னபோது ஒட்டக்கூத்தர் பாடியது. - குறிப்பு : அரும்பைத் கொள்ளாயிர மென்பது அரும்பகைத் கொள்ளாயிர மென்றும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இலக் கண விளக்கப் பாட்டியலுரையில் (80) எண் செய்யுளுக்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் அரும்பைத் தொள்ளாயிரம் இவர் பாடியதுபோலும். ஒருகால் விக்கிரம சோழன், கூத்தர் அகும். பைத் தொள்ளாயிரம் பாடி வருவது கண்டு, அதனுள் வரும் ஒரு கவியை ஒட்டி வேருெரு கவிபர்டச் சொன்னனென்றும், அவ்வாறே இதனைப் பாடிஞ்ரென்னும், இதல்ை இவர்க்கு ஒட்டக் கூத்தரென்ற பெயருண்டாயிற்றென்றும் கூறுவர். தன் மீது இவர் செய்திருக்கும் உலாவிலுள்ள கண்ணியொன்றைக் காட்டி அதனேயொட்டி ஒரு கவி பாடுமாறு விக்கிரம சோழன் கேட்க, கூத்தர் இதனைப் பாடின ரென்பதும் உண்டு. புலி - புலிப்பொறி. பொற்கிரி - இமயமலை, வேங்கை வைக்க, ஒரு திருக்கைச்செண்டாற் கிரி திரித்த சேவகனே' (155) என விக்கிரம சோழனுலாவில் இக் கூத்தரே குறிப்பது காண்க. சயங்கொண் டாரும் புலிப்பொறி வைத்த செய்தியை, செண்டு கெர்ண்டு கரிகாலைெரு காலினிமயச், சிமய மால்வரை கிரித்தருளி மீளவ தனப், பண்டு நின்றபடி நிற்க விதுவென்று முதுகிற், பாய் புலிக்குறி பொறித்தது மறித்த பொழுதே' (கலிங். தா. 165} என்று குறித்துள்ளார். கூத்தரது ஊர் மலரி யெனப்படும்