பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

古蛇一 தமிழ் நாவலர் சரிதை இந்நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் வித்துவான் தேர்வுக்குச் செல்வோர்க்குப் ப்ாட மாக வைக்கப்பெற்றிருந்தமையின், சென்ற சில ஆண்டுகட்குமுன் இ க னே மாணவர்கட்குக் கற்பிக்கும் கடன் என்பால் வருவதாயிற்று. அக்காலத்தில் கல்வெட்டுக்களையும் பிற வரலாற்று நூல்களையும் ஒப்ப நோக்கிக் கற்பிக்கும் பணி யாற்றவேண்டியிருந்தபடியால், அப்போது இதன் கட் காணப்படும் பாட்டுக்கட்கு இயன்ற அளவு குறிப்புக்கள் தேடித் தொகுத்துவைத்தேன். என் பால் திரு. தி.த.கனகசுந்தரம் பிள்ளையவர்கள் வெளியிட்ட பிரதியொன்றும் எனக்குச் சிறுபோதில் தமிழா சிரியராக இருந்த சீகாழி. திரு. கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் கையெழுத்துப் பிரதியொன்றும் இருக் தன. திருநெல்வேலிச் சைவசித்தாந்த நாற்பதிப் புக் கழகச் செயன்முறைத் தலைமையாளர் திரு. வ.சுப்பையா பிள்ளையவர்கள், கோயமுத்தார் திரு. சி. கு. நாராயணசாமி முதலியார் வெளியிட்ட பிரதி யொன்றினைத் தந்தார். இம்மூன்றையும் கொண்டு ஒப்புகோக்கியதில் உண்டான திருத்தங்கள் பல. . இதன் கண் செய்யுள்தோறும் தரப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் குறிப்புக்கள், இந்நூலைப் படிப்பவர்க் குப் பெரிதும் துணேயாமென்று கருதியே சுருக்க மாகத் தரப்பட்டுள்ளன. பல குறிப்புக்களுக்கு வர லாறு விளங்கவில்லை. ஆராய்ச்சியெல்லாம் காலம் செல்லச் செல்ல, வரலாற்றுக் குறிப்புக்கள் மிகுதி யாக அகப்பட அகப்பட விளக்கம் பெறுமாகலின், முன்னேய பதிப்புக்களைவிட இப்பதிப்பு, திருந்திய,