பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழ் நாவலர் சரிதை கசசுசு-ல் (கி. பி. 1544-45) வெட்டப்பட்டது. இவர் அனந்தசய னத்துக்கு (கிருவாங்கருக்கு)ப் படையெடுத்துச் சென்றதாயும், இவருடைய சேனே தெற்கிலுள்ள அனந்தசயனக் தொடுத்து வடக்கில் (நைசாம் கேயத்தில்) உள்ள முதுகல் வரைக்கும் சண்டைசெய்து ஊர்களைப் பிடித்ததாயும், இவர் திருவிடைமரு .துணர்ச் சிற்றம்பலத்தான் என்பவன் வேண்டுகோளின்படி திருவிடைமருதூர்ச் சிவன்கோயிலுக் குரிய ஆவணம், சிற்ருடி என்னும் இரண்டு கிராமங்கள், மறுபேர் கைப்பட்டிருந்தவற்றை விசாரணை செய்து அவற்றின் எல்லைக்கல்வில் மருதப்பேசுரர் முத் கிரையிட்டிருந்தமை கண்டு சிவன்கோயிலுக்குச் சேர்த்ததாயும் கடறுகின்றது. இன்னு மிவர் கன்னியாகுமரி வரைக்கும் சென்ற தற்குச் சான்ருகக் கன்னியாகுமரிக்குச் சமீபத்திலுள்ள சுசீந் .திரத்தில் ஒரு கல்வெட்டு, கொல்லமாண்டு 722-ல் (கி. பி. 154647) வெட்டியது, அங்குள்ள விஷ்ணுகோயிலில் இவர் பிறந்த நாளில் அர்ச்சனே செய்வதற்காகச் சயதுங்காட்டுப் பூதலவிர இராமவன்மா என்னும் கோளவரசன் பொருள் வைத்ததைக் கூறுகின்றது. இவர் திருச்சிராப்பள்ளிச் சீமையை ஆண்டவர். ராபர்ட் சிவெல் என்பவர் எழுதிய புராதன பட்டிகையால் இவர் மதுரையில் கி.பி. 1547-48ல் அரசாண்டதாகவும் தெரிகிறது. 'விட்டு, விட்டி, விட்டல் என்னும் கன்னடச்சொற்கள் விஷ்ணு என்னும் சமக்கிருத பதத்தின் கிரிபு. விஷ்ணு என்னும் வட மொழி தமிழிற் போலக் கன்னடத்திலும் விட்டு என்று .திரியும்' - என்று கிரு. தி. த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் குறிப்பது அறியத்தக்கது. விட்டலராயன் தென்குமரிக்குச் செல் வது கண்டு, பாண்டியன் இப்பாட்டைப் பாடியுள்ளான். விட்டல் ஐயா- விட்டல் என்னும் பெயருடைய ஐயனே. பிறன்மனே நய வாத பேராண்மையுடையான் விட்டலாயன் என்பான், தன். குமரியன்றித் தனிக்குமரி கொள்ளா நீ " என்ருன். t.