பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு : இம் மூன்று பாட்டுக்களும் வரதுங்கராம பாண்டி யன் மதுரைக்குச் சென்றிருந்தபோது தென்காசியில் இருந்து அவன் மனேவி யெழுதி விடுத்த பாட்டுக்களாகும். இவற்றை அவள் பணியாரக் குடத்திலிட்டு விடுத்த வரலாறு விளங்கவில்லை. வரதுங்கன் அரசியல்வினே குறித்து மதுரையில் பன்னாள் தங்கி விட்டானுக, அவன் பிரிவாற்ருத தேவி தன் வேட்கை மிகுதியை வெளிப்பட எழுதித் தெரிவிப்பத்ற் கஞ்சி இவ்வாறு செய்தன ளென்று கோடல் நேரிது. புதுக்கோட்டைச் செப்பேட்டில் காணப் படும் தலைவர்களுள் வரதுங்கனும் ஒருவகைக் காணப்படினும், அவன் நெடிது பிரிந்திருந்ததற்குக் காரணமும் தெளிவாகத் தெரிங் திலது. இந்த வரதுங்கனே அதிவீரராம்பாண்டியனுக்கு இளைய தம்பி யென்பது பெருவழக்கு. புதுக்கோட்டைச் செப்பேட்டால், அதிவீரராமன் திருநெல்வேலிப் பெருமாளான சாலிவாடிபதியின் மகன் என்றும், வரதுங்கன், பராக்கிரமனை குலசேகர பாண்டி யன் மகன் என்றும், குலசேகரனும் கிருநெல்வேலிப் பெருமாளும் உடன்பிறந்தவர்களாதலால், வரதுங்கனுக்கு அதிவீரராமன் சிற்றப்பன் மக னென்றும் அறிகின்ருேம். (A.R.1908 para. 29). அதிவீரராமன், நைடதமும், காசி காண்பீமும், நறுந்தொகையும், இலிங்க புராணமும், கூர்ம புராணமும் - எழுதினனெனவும், வசதுங்கன் பிரமோத்தர காண்டமும் " கருவை யந்தாதிகளும் பாடின னெனவும் கூறுவர். அதிவீரராமன் கொற்கையிலும் வரதுங்கன் கரி,வலம்வந்தநல்லூரிலும் இருந்தன ரென்பர். காசிநாடென்பது தென்காசியைச் சூழ்ந்த நாடு; இதனைத் தென்னுரி நாட்டுச் சித்திரா நதி வடகரைத் தென்காசி (A. R. No. 502 of 1917) என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. தென்காசி, திருக்குற்ருலம் முதலிய இடங்களிற் காணப்படும் கல்வெட்டுக் களில் வரதுங்கன், அதிவீரராமன் என்ற இருவருடைய குறிப் புக்கள் (A. R. No. 482, 574 of 1917) காணப்படுகின்றன. மால் - காம மயக்கம்.