பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



              24 சத்திமுற்றப் புலவன்.
    நாராய் நாராய் செங்கா னாராய் • 
    பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன 
    பவளக் கூர்வாய்ச் செங்கா னாராய் 
    நீயுநின் பெடையுந் 
    தென்றிசைக் குமரி யாடி வடதிசைக் 
    காவிரியாட வேகுவி ராயின் 
    சத்தி முற்றத்து வாவியிற் சென்று 
    கனேசுவர்க் கூரை யரிகுரற் பல்லி 
    வரவுபார்த் திருக்கு மனைவியைக் கண்டெங் 
    கோமான் வழுதி கூடன் மன்றத்(து) 
    ஆடை யின்றி வாடையின் மெலிந்து 
    கையது கொண்டு மெய்யது பொத்திக் 
    காலது கொண்டு மேலுறக் தழீஇ
    அலகுதிறந் தன்ன பல்லின னாகிப்
    பேழைசெய் பாம்பென வுயிர்க்கும் 
    ஏழை யாளனைக் கண்டன மென்மே.            171

இது,'சத்திமுற்றத்தில் ஒரு புலவன் ஜாண்டியன் மதுரைக்

 குப் போகப் பாண்டியன் வாசற்புலவர் வாசல் விடாமல் 
 மறிக்க, ஊரில் அம்பலத்திற் கிடந்தான் பாடியது. 
 இதனையரசன் நகரசோதனை வருவான் கேட்டு மறு 
 நாள் வரிசைபண்ணி, விடும் ஆள்விட்டுக் கட்டுவித்துப் 
 பின்பு அனுப்பின்ை. 

குறிப்பு : சத்திமுற்ற மென்பது தஞ்சைமா நாட்டிலுள்ள பட்டீச்சுரத்தின் ஒரு பகுதியாகும். இதனே இராசராசபுரமென் ஆறும் கல்வெட்டுக்கள் (A. R. No. 266 of 1927) கூறுகின்றன. இச் சத்திமுற்றத்தைக் குலோத்துங்க சோழ வளநாட்டுத் திரு கறையூர்நாட்டுத் திருச்சத்திமுற்ற மென்பதும் (A.R. No. 262.