பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருநமச்சிவாயர் 153 வாய மூர்த்தி யடியார் ஆனந்த நமச்சிவாய பண்டாரமவர் களுக்கு' என்று குறிப்பதால், குருகமச்சிவாயர் பதினரும் நூற் முண்டின் பிற்பகுதியில் இருந்தவரென்பது தெளிவாம், காஞ்சி, குடந்தை, நாகை என்ற மூன்று ஊர்களிலுமுள்ள சிவன்கோயில் கட்குக் காரோண மென்பது பெயர். காரோணரே எனப் பொதுப்படக் கூறுதலின், இப்பாட்டு மேலே கூறிய மூன்றிடங்க ஞள் எதனைச் சிறப்பாகக் குறிக்கிறதென்பது விளங்கவில்லை. நாகைபோலக் காஞ்சியும் குடந்தையும் பயில வழங்காமையின், ஈண்டைக் காரோணமென்றது நாகைக் காரோணத்தையெனக் கொள்ளின், இழுக்காகாதென்க. இனிக் காரோணமென்பது, காயாவரோகணம் என்ற வடசொற்ருெடரின் சிதைவென்றும், செம்பொருளாகிய கிவன் மக்களுடம்பில் இறங்கி மக்கள்போலத் தோன்றுமிடம் என்பது இதன் பொருளென்றும், லகுளிசாவதா ரம் இதலைாவதென்றும் வடமொழி இலிங்கபுராணம் கூறுகிற தென்பர். பிறவா யாக்கைப் பெரியோனகிய சிவ பரம்பொருட் குப் பிறப்பிறப்புக்களுண்டென்றும், கந்துடைகிலேயாகிய சிவக் குறியை ஆண்பெண் குறியென்றும் பொய்புனைந்த வடமொழிப் புராணக்கூற்றை நெடுநாட்கு முன்பே தமிழறிஞர் மறுத் தொதுக்குவாராய், காரோணமென்பது, காயாரோகணமென்ப தன் சிதைவென்று காட்டி, அரியயன் முதலிய தேவருள்ளிட்ட அனவரும் ஒடுங்குங் காலத்து, அவர்தம் காயத்தைத் தம் திரு. மேனியிற் றங்கிவருதலின் சிவபெருமான் காயாசோகன ரெனப் பட்டிாரெனச் சிவஞான முனிவர் முதலiயினர் தெருட்டியுள்ள னர், இக்கருத்தே தோன்ற நம்பியாரூாரும் காகைக் காரோ ணத் திருப்பதிகத்தில் சிவனே, செத்தார்தம் எலும்பணிக்து சேவேறித் திரிவீர்” என்று குறித்தருளியது ஈண்டு நினைவுகூரத் தக்கது. அத்தி - யானே. - . . . . குருகமச்சிவாயர் ஒருகால் மிகப்பசித்து உண்வின்மையால் வருந்தி இப்பாட்டினேப் பாடினராக, காரோணர் அமுது கொடுத்தார்' என்ருெரு குறிப்பு இப்பாட்டின் இறுதியில் ஏடு களிற் காணப்படுகிறது. இலாட தேசத்திலே காரோகணம் என்ருே குருள' தென்றும், அங்கே சிவன், லகுலீசபட்டாரக -