பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. வாயற்பதிவடுகன் கட்டளைக் கலித்துறை தன்னுடன் கூடப் பிறந்துயி ராகிய தம்பியையும் அங்கில் மாண்டது தோன்ருமல் மூடிவைத் தன்னமிட்டான் மன்னவர் போற்றிய வாழ்செந் தலங்கை வடுகனுக்குக் கன்னனுஞ் சோமனு மோகிக ராயினிக் காண்பதுவே. இது, பிணத்தை மூடி யன்னமிட்டபோது, ஒரு புலவன் பாடியது. குறிப்பு : வாயற்பதி யென்பது தொண்டைநாட்டி லுள்ளதோ ரூர். இதனைச் செக்தலங்கை யென்பர் போலும். தொண்டை காட்டிலுள்ள தலங்கை யென்னு மூர்தான் செந்தலங்கை யென வும் வாயற்பதி யெனவும் குறிக்கப்படுகிறதோவென கினேத்தற் கிடமுண்டாகிறது. செங்கலங்கை யென்றும் பாட வேறுபா * டுண்டு. இவ்வூரில் வாழ்ந்த செல்வன், வடுகநாதன் என் பவன். ஈத்தற்கண் உளதாகும் இன்பத்தில் பேரிடுபாடுடை யவன் இச்செல்வ்ன். ஒருகால் இவனுடைய தம்பி நோய் வாய்ப்பட்டு இறந்தான்." அங்கிலேயில், அதனை யறியாது பசி நோயால் துயருற்ற புலவஒெருவன் வடுகன யடைந்தான். உடனே வடுகன் தன் தம்பியின் பிணத்தை மூடிவைத்துவிட்டு, வெளியே வந்து புலவருக்குச் சோறிட்டுப் பகி போக்கின்ை. அதி னேப் பின்பறிந்த புலவன், இப்பாட்டைப் பாடி வடுகன் புகழை கிலேபெறுவித்தான். அப்புலவன் இன்ன னென்றும், இவ்விரு. வரும் இன்னகாலத்தவ ரென்றும் அறிய முடியவில்லே. இச் செய்தியைத் தொண்டைமண்டல சதகம், கேயத் துடன்பிறந் தோன்பின மூடி கெருப்பவித்து, தாயொப் பெனவெதிர் கொண் டழைத் தேதன் னுடனெனவே, ஆயத் தமிழ்கொண் டருங்கவி ராயனுக்கன்பு செய்த, வாயற்பதியில் வடுகனும் வாழ்தொண்டை மண்டலமே' (58) என்று கூறுகிறது. அதன் மேற்கோளாக * இப்பாட்டும் காட்டப்பட்டுள்து. மேலும், வாழைக்கன்றும் கனி யுதவும் என்பது போல வடுகநாதனுடைய மகனும், கன் கிரு