பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தமிழ் நாவலர் சரிதை உடை முழுதும் பீறியிருந்தது. அக்கினி யென்றது பசித்தியை. அான்-சிவன். எமன் சிவனே யணுகர்ன்,முன்பொருகால் சென்று உதையுண்டதல்ை. வருணன், தண்ணிரைக் குறிப்பது. அகில அரி. காற்று. அமுதமாய் வருவன் - காற்றே உணவாவது. சந்தகம் -எப்போதும். தரித்திரராசன். வறுமையாகிய வேந்தன். எளிதில் வெல்ல முடியாமை தோன்ற, வேந்தனென உருவகம் செய்தார். தலைசெயும் இடங்தோறும் திரியும். மந்தரப்புயன் - மக்காமலே போலும் தோளேயுடையவன். ஈசானன் . செல்வன். இப்பாட்டில் இந்திரன் முதலிய திக்குப்பாலகர் எண்மரும் கூறப் படுவது காண்க. - வெண்பா. கோக்குதிரை கின் குதிரை கோவன்மது ராவொன்னர் மாக்குதிரை யெல்லா மனேக்குதிரை-தூக்குதிரைத் துங்கக் கரைக்குதிரை சொக்கன் குதிரைசது ாங்கக் குதிரைகளே யாம். 209 இது, காளமேகளுள் அதிமதுர கவிராசன் பின்னே கானவரம் ատգատ. குறிப்பு: ஒருகால் காளமேகப்புலவர் போய்க்கொண் டிருக்கையில் அவர் பின்னே அதிமதுர கவிராசன் என்பவர் &৫ குதிரையூர்ந்து அவ்ரைக் காணவந்தார். அவரை விரும்பி வர வேற்று அன்பால் அளவளாவிய காளமேகளுர் அவருடைய குதிரையை வியக்து இப்பாட்டைப் பாடினர். கோக்குதிரை - தலையாய குதிாை, கோவேறு கழுதையுமாம்; பண்டைநாளிற் செல்வமுடையார் கோவேறுகழுதையின் மேற் செல்வது மரபு. *ஆானவண்கையன் அத்திரி யேற (சிலப். 6 119) என இளங்கோவடிகள் கூறுதல் காண்க. கோவல் - கோவலுரர்; இஃது அதிமதுரகவியின் ஊர். மனேக்குதிரை - நெசவாளர் பாவோடுதற்கு மனயில் வைத்திருக்கும் குதிரைகள்: இனி மனேகளில் துலங்களின்மேல். நிறுத்தப்படும் குதிாைச்சட்டங்கள் என்று உரைத்தலு மொன்று. கிரை - அலே, துங்கம் - உயர்வு.