பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(194 தமிழ் நாவலர் சரிதை பாகாது என்பர். தூது, பல்சந்தமாலை, உலா, அந்தாதி, மடல், கோவை, பரணி, பெருங்காவியம், சிறுகாவியம் முதலிய பல வகைத் தமிழ் நூல்கள் கூறப்படுவது காண்க. இவற்றின் இயல்பை இலக்கணவிளக்கப்பாட்டியல், வச்சணந்திமாலே முதலிய நூல்களுட் காணலாம். வெண்பா. வாசவய னந்தி வரகா திசையனத்தும் வீசு கவிகாள மேகமே-யூசுரனே விண்டின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன் மண்டின்ற பாணமென்ற வாய் 224 இஃது அதிமதுர கவிராசன் பாடிய கையற்ம். குறிப்பு : காளமேகப்புலவர் இறந்தபின் அவருடலைச் சுடல்ை யில் வைத்துத் தீயிட்டனர். அப்போது உடனிருந்தவருள் அகி - மதுரகவியும் ஒருவர். காளமேகத்தின் அவர்க்கு மிக்க துயரத்தைச் ச்ெய்தது. அவர் மனங்கசிங் துருகி இப்பாட்டைப் பாடினர். கந்தி என்பது காள்மேகம் பிறந்த ஊராகிய நந்திபுரம். இஃது இப்போது நாதன்கோயில் என வழங்கும்; கும்பகோணத்' துக் கருகிலுள்ளது. வரதன் என்பது காளமேகத்தின் இயற் பெயர். கவி விசு காளமெக்மே என இயையும். பூசுரன்- பார்ப் பான். பூசுரா என்றும், வேவதோ என்றும் ஐயையோ வென்றும் பாடவேறுபா டுண்டு. விண் கின்ற வெவ்வழல் - தீ காற்றிலும் காற்று விண்ணிலும் ஒடுங்குமாயினும், காற்றுக் கட்புலகைா மையின் விண் கின்ற வெவ்வழல்' என்ருர், பாவியேன்.ட பாவியேன் பொருட்டு ; பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு விகாரத்தால் தொச்கது. மண்டின்ற பாண மென்ற வரலாற்றை இந்நூல் 211-ஆம் ப்ாட்டுக் குறிப்பின்கட் காண்க. -