பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு:-மலேயமான் கிருமுடிக்காரி திருக்கோவலூரிலிருந்து ஆட்சிபுரிந்த குறுநில மன்னனுவான். கடையெழுவள்ளல்களுள்' இவனும் ஒருவன். இவனது குதிசைக்கும் இவன் தன் பெயரையே வைத்துப் பேணிவந்தான். செங்கைமாவின் தெற்கே பெண்ணே யாற்றின் தென்மேற்கிலுள்ள முள்ளுர் இக்காரிக் குரியதாய் மிக்க பாதுகாப்புடன் விளங்கிற்று. ஒருகால் அதனேக் கைப்பற்றக் கருதி வடகாட்டு ஆரியமன்னர் பெரிய வேற்படையோடு போந்து முற்றுகையிட்டனர். அதனையறிந்த காரி கோவலுரரினின்றும் சென்று தன் வேற்படைகொண்டு தாக்கினுகை, அவ்வாரியர் கடட்டம் அரியேற்றின்முன் கரிக்கூட்டமென அஞ்சி யோடிவிட் டது. இவன் புலவர் பாணர் முதலிய இரவலர் பலர்க்கும் அவர் வேண்டுவனவற்றை வரையாது வழங்கிப் புகழ்விளேத்தான். தமிழ்வேந்தர் மூவரும் இவன்பால் பெருமகிப்பும் உயர்நட்பும் உடையவராயிருந்தனர். இடைக்காலத்தே மலையமான்கள் சீர் குன்றிச் சிறுார்கட்குத் தலைவராயிருந்தனரெனத் கிருக்கோவலூர் காட்டிற் காணப்படும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்நாட்டு வானகோப்பாடி நாடும், செங்குன்ற நாடும் மலாடும் கிளியூர் மலேயமான்களின் ஆட்சியில் இருந்தன (A.R.No. 190 of 1934-5) என்றும், கிளியூர் நாட்டுக் கிளியூர் மலேயமான் பெரியன் (A. R. No. 228 of 1986-7) மலேயமான் சித்தவடவன் (A. R. No. 252 of 1936-7) முதலியோர் சிறப்பெய்தி யிருந்தனரென் தும் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம். - - - நிற்க, ஒருகால் கபிலர் மலேயமான் திருமுடிக்காரியைக் காணச்சென்றபோது, அவன் யாவரையும் தன்னுெப்பக் கருதும் கருத்தால் எல்லார்க்கும்போல அவர்க்கும் வேண்டும் சிறப்பினச் செய்தான். அக்காலே அவர், வேங்தே, யாவர்க்கும் ஈதல் எளிது; ஆயினும், ஈத்தது கொள்ளும் பரிசிலருடைய வரிசை யறிதல் அரிது ; அதனை யறிந்து வழங்குவதே சிறப்பு. ஆதலால், புலவர் பால் வரிசைநோக்காது பொதுகோக்கு நோக்குதலை யொழிக ’’ என்று இப்பாட்டால் வற்புறுத்தினர். உள்ளி, கினேந்து. பொதுகோக்கு - யாவரையும் ஒருதர மாகப் பார்த்தல்.