பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழ் நாவலர் சரிதை


இதுகேட்ட குமணன் தன் தலையைக் கொண்டுவருவோருக்கு மிக்க பொருள் தருவதாகத் தன் தம்பி பறையறைந்திருக்கும் செய்தியை நினைவு கூர்ந்தான். தன் கைவாளைப் பெருந்தலைச் சாத்தனார் கையிற் றந்து, 'இதனால் என் தலையைக் கொய்து கொண்டுசென்று என் தம்பிக்குக் காட்டிப் பொருள் பெற்றுச் சென்று, நீவீர் நுமது வறுமையை நீக்கிக்கொள்ளுதீர் என மொழிந்தான். அருந்திடர் - எளிதில் போக்கமுடியாத மேடு, ஊதல் ஊற்று. உலகாற்ற - உலகிற்கு உதவிசெய்ய தேற - மிகவும் தெளிவாக, வறியையேயானாலும் என்றும் பாடம்.


7. கோவூர் கிழார்.
ஆசிரியப்பா.

இரும்பனை வெண்டோடு மலைக்தோனல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்னகண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே
இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனால்,
குடிப்பொரு ளன்று,நுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே.18

இஃது உறையூர் முற்றியிருந்த நிலங்கிள்ளியையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர்கிழார் பாடியது.

குறிப்பு :-சோழன் நலங்கிள்ளியும் சோழன் நெடுங்கிள்ளியும் ஒரு குடியிற் பிறந்து வேறுவே றிடங்களிலிருந்து ஆட்சிபுரிந்து வருகையில் இருவர்க்கும். எவ்வகையாலோ பகைமையுண்டாக, அதனால் போரும் நிகழ்வதாயிற்று. தொடக்கத்தில் சோழன்