பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'40. தமிழ் நாவலர் சரிதை வெண்பா இருeர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுகின் குற்றம்-மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண் - டோட்டைச் செவியுமுள. 36 இஃது ஏழிற் கோவைப் பாடிய அங்கதம். குறிப்பு:-ஆசிரியர் பேராசிரியர் இதனைச் செம்பொருளங்க தத்துக்கு எடுத்துக்காட்டி, ஏழிற் கோவை ஒளவை முனிந்து பாடியது ' என்று கூறினர். ஏழில் என்பது மேற்கு மலேத்தொட கில் உள்ளது. இதனே இந்நாளில் சப்தசயிலம் என்று வழங்கு கின்றனர். இம்மலே கன்னனென்னும் வேந்தனுக் குரியதென ஆசிரியர் பரணரும் (அகம். 152), மாமூலனரும் (அகம். 349), குடவாயிற் கீரனரும் (அகம், 345), பாலேபர்டிய பெருங் கடுங்கோ வும் (தற். 391) கூறுகின்றனர். இது கொண்கான நாட்டைச் சேர்ந்தது. நன்னன் வழிவந்தோருள் ஒருவன் ஏழிற்குன்றத்துக் குரியகுய் ஆட்சிபுரிந்து வருகையில் ஒளவையார் ஒருகால் அவன் பால் சென்ரர். அவன் அவரை இனிது வரவேற்றிலன். அத குல் சினங்கொண்டவர், இப்பாட்டைப் பாடினர். . இருள்தீர்மனி - இருளேக் கெடுக்கும் ஒளிபொருந்திய மனி. ம்ருள்தீர்ந்த - குற்றமில்லாத. பயிலாதன - பயிற்சியில்லாத்ன வாகிய, சொல்வனவற்றை வாங்கி உள்ளத்தே நிறுத்தாமல் விட்டுவிடுத்வின், ஒட்டைச் செவி யென்மூர். வெண்பா . தண்டாம லீவது தாளாண்மை தண்டி அடுத்தக்கா லீவது வண்மை-அடுத்தடுத்துப் பின்சென்ற வீவது காற்கூலி பின்சென்றும் பொய்த்தனிவனென்று போமே லவன்குடி எச்ச மிறுமே லிறு. 37