பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 41 சென்றுழு துண்பதற்குச் செய்வ தரிதென்று மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை-முன்றிலில் துச்சி விருந்து துடைத்தழுகண் ணி.ராலேழ் எச்ச மிறுமே லிறு. - 38 வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி வழக்கை வழக்கழிவு சொல்லின்-வழக்குடையார் சுற்றமுந் தாமுங் துடைத்தழுகண் ணிராலேழ் சுற்ற'மிறுமே விறு. 39 இவையும் மேல் வருவனவும், முன்று கிழிக்குச் சங்கிலி இறப்பாட, ஒரு கிழிக்கு நிறை நில்லாத கவி பாட, ஒரு கிழிக்கு நாலு கோடி கவிபாட என்று ஆக அஞ்சு கிழியும் பாண்டியன் வாசலிற் கட்டிவைத்தபோது ஒளவையார் பாடியன. - குறிப்பு:உஒருகால் ஒரு பாண்டியன் ஐந்து பொற்கிழிகளேத் தன் அரண்மனே வாயிலில் தூக்கி, ஒரு சங்கிலியும் நிறைநிற்கும் துலாக் கோலும் வைத்து, இச்சங்கிலி இறுமாறு பாடுவார்க்கு மூன்று கிழியும், இக் கோல் நிறை கில்லாவாறு பாடுவார்க்கு ஒரு கிழியும் தருவேன்; எஞ்சி நிற்கும் ஒரு கிழியை நான்கு கோடி கவி பாடுவ்ார்க்குக் கொடுப்பேன் என்று புலவர் கூட்டத் துக்குத் தெரிவித்தான். புலவர் பலர் அவற்றைப் பெற முயன்றும் வெற்றிபெரு தொழிந்தனர். அவ்வழியே வந்த ஒளவையார் இம் மூன்று வெண்பாக்களேயும் பாடினர்; உடனே சங்கிலி இற்று வீழ்ந்தது. மேல் வரும் வையகமெல்லாம்" என்று தொடங்கும் பாட்டைப் பாடியதும் துலாக்கோல் கிறை கில்லாதா யிற்று. அதன்பின் கோடியுறும் ' என முடியும் நான்கு குறள் வெண்பாக்களைப் படி நான்கு கோடி கவியெனக் காட்டி ர்ை. இவற்றைக் கேட்ட சான்ருே வியந்தனர். பாண்டியன் கிழியைந்தனேயும் ஒளவையார்க் களித்து அகமகிழ்ந்த Tir. தண்டாமல் - குறைவுண்டாகாமல், எச்சம் - வழிமுறை. மன் அழுதுண்டான் : மன்று-ஊரானிரைகள் சென்அத்ங்கும் பொது