பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் நாவலர் சரிதை இஃது ஒருகால் ஒளவையாரைச் சிலர் சமய தத்துவங்களை புாைக்குமாறு வேண்ட, அவர்க்கு ஒளவையார் தத்துவங் கூறியது. . குறிப்பு : ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் ' என்ற திருமந்திரப்படியே சாகி சமய வேறுபாடின்றி ஒருமையுறக் காண்பதே நற் காட்சி; இதனேச் சம்மிய கிருட்டி யென்பர். புலன் - புலன்கள் மேற் செல்லுகின்ற ஆசை. சாவாமல்-சோர்வு படாமல். பிறர்க்குத் தொண்டுசெய்து உணவுபெற்று உண்டு வாழ்வது மானமுடைய உரிமை வாழ்வாகா தென்பார், 'தனப் பிறர் ஏவாம லுண்பதே ஊண் ' என்ருர். போனக மென்பது தானுழந் துண்டல்' என்பது கொன்றைவேந்தன். வெண்பா ஏரு மிரண்டுளதா யில்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுமாய்-ஊருக்குச் சென்று வரவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டால் என்று முழவே யினிது. 64 இது சிலர் இவையாரை உழவு நன்றே என்று கேட்ட போது பாடியது. . • - - تنتميزt ؟ குறிப்பு : வடநூல்களில் உழவுத் தொழில் சிறப்ப்ாகக் கடறப்படாமை கண்ட சிலர் ஒளவையாரை கோக்கி உழவுத் தொழில் நன்றே என வினவினர். அவர்கட்கு இப்பாட்டால் ஒளவையார் விடையிறுத்தார். ஒரேருழவன் சிறப்படையான் என்பதைச் சங்க இலக்கியங்களில் காணலாம். செய்வார் . ஏவின செய்யும் பணியாட்கள். ஏகர்ரம் தேற்றம் ; ஏனைத் தொழி லெல்லாவற்றையும் பிரித்தலின் பிரிகிலேயுமாம். nsmeده يضع معضمصية ممتمسمسم