பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rô2 தமிழ் நாவலர் சரிதை குறிப்பு: ஈசன்றன் மக்களென்றும் மீட்டுவர் தங்கால் என்னும் பாடவேறுபா டுண்டு. சில நூற்றுண்டுகட்கு முன்பு தென்னுட்டுத் திருக்கோயில்களில் மகளிர் பலர் தேவரடியா ரெனவும், பதியிலா ரெனவும், கோயிற் பெண்க ளெனவும் இருந்து, கெற்குற்றுதல், திருவலகிடுதல், பூத்தொடுத்தல் முதவிய பல திருப்பணிகள் புரிந்தொழுகினர். வேறு சிலர் கூத்தும் இசையும் பயின்று சந்திகளிலும் விழாக்காலங்களிலும் சாந்திக் கடத்தாடலும், நல்லிசை நவிற்றலும் செய்தனர். இவர்களுள் செல்வமிக்குடையோர் சீரழிந்த கோயில்களில் திருப்பணி செய் தலும், இல்லாமலும் சீரழிந்தும் போன கிருவுருவங்களே ஏற் படுத்துதலும், புதுக்குதலும் செய்துள்ளனர். திருக்கோயிலாட்சி முறைகள் சீரழியத் தொடங்கிய பின், இவர்களுட் பலர் வரை வில் மகளிராகிய கணிகைமகளி சாயினர். முடிவில் திருக் கோயில்கட்கும் இம் மகளிர்க்கும் தொடர்பே இல்லாதொழியவே.. இவர்கள&னவரும் காசுக்கு நலம் விற்கும் கடைமகளிராக மாறி னர். தேவரடியா சென்ற பெயர் மாறிற்று. தேவரடியார், பதியிலார், கோயிற் பெண்கள், நாடகம்களிர் என்பன முதலிய பெயர் நீங்க, தேவரடியார் தேவதாசி என்ற பொதுப்பெயர் உண்டாயிற்று. பொய்யாமொழியார் கால்த்தே தேவரடியார் r பலர் செல்வர் பொருள் பறிக்கும் தேவடியாட்க்ளாய் மாறி யிருந்தனர். கிருக்கானப்பே ரென்னும் காளேய்ார்கோயிலுக் குச் சென்றிருந்தபோது தேவரடியார் எழுபதின்மர் அங்கே இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் தலைக்கு ஆயிரம் பொன்கை எழுபதியிைரம் பொன் பொய்யாமொழியார்க்கு இரவலர் இன்மை தீர்க்கும் கருத்தால் கல்கின ரெனவும், அக் காலத்தே அவர் இப் பாட்டைப் பாடின. ரெனவும் கூறுவர். வாசமலர் மடங்தை - திருமகள். புண்ணியமுள்ள அளவும் ஒருவனைப் பற்றியிருந்து, அப் புண்ணிய முலர்ந்த பின் அவனேக் கையற்ருெழிவது திருமகள் தொழில். அவ்வாறே இத் தேவமகளிரும் செல்வ மிருக்குமளவும் ஒருவனேப் பற்றியிருந்து அச் செல்வம் தொலைந்த பின் அவனேக் கையுதிர்த்து நீங்குவர். அதுபற்றியே : வாச மலர்மடங்தை போல்வார்' என்ருர், தேவ .ரடியா ரென்பது தோன்ற, ஈசன் தமர்கள்' என்ருர். இரவலர்