பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தமிழ் நாவல்கள்

“ஐயோ! ஐயோ! நீ நாசமாய்ப் போக"[1] என்று கத்தும்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. கமலாம்பாள் தனியே இருக்கும் போது தன் கணவன் துறவியானதாகக் கனாக் காண்கிறாள்[2]. இவை பின்வரும் நிகழ்ச்சிகளுக்கு அறிகுறியாக உள்ளன.


பிற இயல்புகள்

ராஜம் ஐயருக்குக் கம்பராமாயணத்தில் உள்ள ஈடுபாட்டையும் அவர் தாயுமானவர் பாடலிலும் திருவாசகத்திலும் இன்பங்காணும் இயல்பையும் அறிகிறோம். பழைய காலத்துச் சிற்றூரின் காட்சியையும், விளையாடலையும், கல்யாணத்தில் நிகழும் சம்பிரதாயச் செயல்களையும் தெரிந்து கொள்கிறோம். இடையிடையே நகைச்சுவை பாயசத்திற் கலந்த ஏலம் போல மணக்கிறது.

ஜேன் ஆஸ்டினைப்பற்றி ஒன்று சொல்வதுண்டு. அந்த ஆசிரியை மிகப் பெரிய கிழியை அமைத்து விரிவாகத் தம் நாவலை எழுதவில்லை. நெப்போலியனின் பராக்கிரமங்களைப் பற்றி எழுத வாய்ப்பு இருந்தும் அவர் அந்தப் பக்கமே போகவில்லை. கல்யாணம் கார்த்திகைகள் நடக்கும் வீட்டையும் குடும்ப மக்களையும் வைத்து நாவலை எழுதியிருக்கிறார். இதனால் அவருடைய கதையின் மதிப்பு ஏதும் குறைந்து போகவில்லை. தாம் உணர்ந்த எல்லையில் இன்று அந்தப் பரப்புக்குள் ஆழமாகப் புகுந்து அற்புதமான பாத்திரங்களை அவர் படைத்திருக்கிறார். நாவலாசிரியருக்கு அகலம், வேண்டும் என்பது இல்லை; ஆழம் இன்றியமையாதது. இங்கிலீஷ் நாவல்களைப்பற்றித் தனி நூல் எழுதிய ஆர்நால்ட் கெட்டில், அவரைப் பற்றி எழுதும்போது[3], 'ஜேன் ஆஸ்டினைப்பற்றிய விமர்சனங்


  1. ப. 581
  2. ப. 158.
  3. Arnold Kettle; An Introduction to English Novel, vol. 1, p. 98,