பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. மூன்று நாவல்கள்

89

களில் மகா மட்டமானது ஒன்று உண்டு. அவர் வாட்டர்லூப் போரைப் பற்றியும், பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றியும் எழுதவில்லையே என்று குறை கூறுவது அது. தாம் எதைத் தெரிந்துணர்ந்தாரோ அதைப்பற்றி அவர் எழுதினார். எந்தக் கலைஞரும் இதைவிட அதிகமாக ஒன்றும் செய்து விட முடியாது' என்கிறார். அவ்வாறே, கமலாம்பாள் சரித்திரத்தைப்பற்றி. 'அது பெரிய பெரிய சம்பவங்களை விரிவாகச் சொல்லவில்லை' என்று யாரேனும் கூறுவதாக இருந்தால், 'ராஜம் ஐயர் தாம் உணர்ந்தவற்றை ஆழமாக உணர்ந்து அவற்றைப்பற்றி எழுதினார் அழகாகவும் கச்சிதமாகவும் படிப்பவர் மனத்தில் பதியும்படியாகவும் எழுதினார்' என்று நாமும் சொல்லலாம்.

எந்த நாவலின் வெற்றியும் அதைப் படித்து முடிக்கும் போது படிப்பவர்களுக்கு உண்டாகும் மன நிறைவைப் பொறுத்து அமையும். கமலாம்பாள் சரித்திரத்தைப் படித்து முடித்தவுடன் அந்த நிறைவு உண்டாகிறது; அதிலுள்ள பாத்திரங்களின் உருவம் நம் உள்ளத்தில் நின்று வீணைநாதத்தின் கார்வைபோல நிலவுகின்றன. இதுவே அது ஒரு நல்ல நாவல் என்பதற்கு அறிகுறி.

பத்மாவதி சரித்திரம்

மலாம்பாள் சரித்திரத்தில் கதாநாயகியாகிய - கமலாம்பாளின் ஒழுக்கத்தைப்பற்றிய அபவாதம் கதையின் சிக்கலுக்குக் காரணமாக நிற்கிறது. அதேபோலப் பத்மாவதி சரித்திரத்தில் கதாநாயகி பத்மாவதியின் ஒழுக்கத்தைப்பற்றிய ஐயம் கதையில் சிக்கலை உண்டாக்குகிறது. பத்மர்வதியின் கணவனாகிய நாராயணனுக்கு