பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

தமிழ் நாவல்

ஐயமும் முதிர்வும்

ந்தச் செயலுக்கு வாய்ப்பான சூழ்நிலை அப்போது இருக்கிறது. கோபாலன் தன் மனைவியின் சிறு கோபங்களால் அவளை மெல்ல மெல்ல வெறுக்கிறாள். தன் படிப்பை மறந்து அவளுக்கு இணக்கமாக நடந்தும் அவள் இங்கிதம் அறிந்து நடக்காததனால் அவனுக்குச் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு அவளை ஊருக்கு அனுப்பி விடுகிறான். அவன் உள்ளம் காம உணர்ச்சியடைகிறது. கோபாலன் ஊரில் முன்பு இருந்தவளும், ஒழுக்கப் பிசகு உள்ளவளுமாகிய சாலா என்பவள் சங்கரனிடம் பழகுகிறாள். கோபாலன் அவளிடம் சிக்குகிறான். அவன் அவளுக்கு ஒரு காதற் கடிதம் எழுதுகிறான், அது சங்கரனிடம் கிடைக்கிறது. அதன் விலாசத்தை மாற்றிப் பத்மாவதிக்கு அனுப்புகிறான் சங்கரன். தானே மற்றொரு கடிதத்தையும் கோபாலன் எழுதியதாக் எழுதுகிறான். இந்த இரண்டும் நாராயணன் கையில் கிடைக்கின்றன.

கோபாலனுடைய இன்ப விளையாடல்களை அறிந்து வருந்தியவனாதலின், நாராயணன் இதுவும் நேர்ந்திருக்கக் கூடும் என்று எண்ணுகிறான். கோபாலனோ தன் ஒழுக்க மாறுபாட்டை நாராயணன் அறிந்திருப்பானென்று அவன் முன் வர நாணி அவன் இல்லாதபோது அவன் வீடு வந்து அவனுடைய தாயைப் பார்த்துச் செல்கிறான். இந்தச் செய்கை நாராயணனுடைய ஐயத் தீயில் நெய் பெய்து வளர்க்கிறது. அதனால் கணவன் மனைவிய ரிடையே மோதலும், ஒவ்வொருவர் மன்த்திலும் சொல்ல வொண்ணாத மன உளைச்சலும், உயிரை விட்டு விடலாம் என்ற அளவுக்கு வாழ்க்கையில் வெறுப்பும் விளைகின்றன.