பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

தமிழ் நாவல்

நாராயணன்

ந்த நாவலில் நாராயணன் முக்கியமான பாத்திரம். அவன் வறுமையிற் செம்மையாக வாழக் கற்றவன்; துன்பத்தில் மனம் தளராதவன்; தாயினிடம் பக்தி உள்ளவன். இளம் பருவத்திலே பத்மாவதியிடம் அன்பு உண்டாகி அது காதலாக மலர்கிறது. பெண்களும் படித்துச் சிறந்த நிலை பெறவேண்டும் என்பது அவன் ஆசை. சாவித்திரி படிப்பதற்கும் பத்மாவதி படித்துப் பண்டிதை ஆவதற்கும் அவனுடைய முயற்சி காரணமாகிறது. இசையிலே அவனுக்கு ஆர்வம் அதிகம். தன் தாயையும் ஒளித்து அதில் ஈடுபடத் துணிந்தாலும், கல்வி யின் பாலுள்ள ஆர்வம் அந்த ஈடுபாட்டைத் தணிக்கிறது. அவ்வப்போது மனச் சஞ்சலம் அடைந்தாலும் பிறகு ஆய்ந்து பார்த்துத் திண்மையைப் பெறும் ஆற்றல் அவனுக்கு இருக்கிறது.

பத்மாவதி

த்மாவதி, நாராயணனுடைய மனத்துக்கு இசைந்த மனைவியாக விளங்குகிறாள். அழகு நிறைந்தவள். எப்பாடு பட்டாயினும் தன் கணவன் மனத்துக்கு இயைய நடந்து அவனால் மெச்சப்பட்டு, அவன் காதலை அடிமை கொள்ள வேண்டும் என்ற அவாவினளாயிருந்தாள். அவ்விஷயத்தில் மட்டும் அவள் மெய்வருத்தம் பாராள்; பசி கோக்காள், கண் உறங்காள்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாள்: அவமதிப்பும் பாராள். அவளுடைய ஒவ்வொரு செய்கை யிலும் இக்குணமே முக்கியமாய் விளங்கிற்று. அவள் மற்றவரினும் அதிக வருத்தமெடுத்துப் படித்தால், அது நாராயணனுக்கு அதிகத் திருப்தியை உண்டாக்கும் என்றே; வஸ்திரத்தை ஒருவீதமாகத் தரித்துக்கொண்டால்