பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மூன்று நாவல்கள்

99

2. மூன்று நாவல்கள் 99.

கேட்கச் செய்கிறார். நாராயணன் சாவித்திரியைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையால் கோபாலனுடன் அரியூருக்குச் செல்ல எண்ணுகிறான். ஆனால் இதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இதைச் சொல்லி விட்டு, 'இதைப் படிக்கும் எம் நண்பரே' என்று தொடங்கி ஒரு பெரிய விமரிசனத்தைச் செய்து, நண்பரே! உம்மனதும் எம்மனதும் நாராயணன் மனதும் கோபாலன் மனதும் மற்றும் எல்லோர் மனங்களும் வேறு எவ்வாறு பேதம் உடையனவாக இருப்பினும், தீயொழுக்கத்தினும் நல்லொழுகத்தினும் பழக்கத்துக்குத் தக்கபடி பலப் பட்டுத் தேறுவதில் சந்தேகம் இல்லை ஆதலின், நாம் வெகு கவனமாகவும் விழிப்பாகவும் இருப்போமாக!" என்று முடிக்கிறார். இத்தகைய இடங்கள் வேறு சில உண்டு. தாக்கரேயின் நாவல் ஒன்றை விமரிசனம் செய்ய வந்த திறனாய்வாளர் ஒருவர். அடுத்தடுத்து நாவல் முழுவதும், பாத்திரங்களின் செய்கைகளால் ஏற்படும் சுவை ஆ சி ரி ய ரி ன் விமரிசனத்தால் தளர்கிறது; சிதறுகிறது' என்று எழுதுகின்றார். தாக்கரேயின் நாவலிலேயே இந்தக் குறை காணும்போது பத்மாவதி சரித்திரத்தில் இருப்பது பெரிதன்று. .

இதுகாறும் பார்த்த மூன்று சரித்திரங்களில் முதலாவதாகிய பிரதாப முதலியார் சரித்திரம் விநோதமும் நிதியும் புகட்டும் கதையாக இருக்கிறது. கமலாம்பாள் சரித்திரம் திரண்டுருண்ட மணியாக நிலவுகிறது. பத்மாவதி சரித்திரம் கதையினிமை மிக்குச் சில சிறு குறைகளுடன் நற்கிறது. பத்தொன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மூன்றையும் ஒருவாறு பார்த்து விட்டமையால் இனி அடுத்த நூற்றாண்டுக்குள் னுழைவோம். . . . . . . .

1. L. 78, '81. 2... u. 127. 3. Arnolā kettle: Âìನ್ಗ್ to the English Novel, vol. I, p. 169. - . -