பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3. கல்கியின் நாவல்கள்
வாதாபி கணபதி

பழைய காலத்தில் சங்கீதக் கச்சேரிகளில் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற கீர்த்தனத்தைச் சங்கீத வித்துவான்கள் முதலில் பாடுவார்கள். இசை தெரிந்த வர்கள், ஹம்ஸத்வனி ராகம்' என்று சொல்லிக்கொள் வார்கள். சங்கீத உருப்படிகளில் கினைவுள்ளவர்கள், "தீட்சிதர் கிருதி' என்பார்கள். பக்தர்கள், கணபதி வணக்கம் ஆரம்பமாகி விட்டது' என்று சொல்லுவார்கள். இந்தக் கீர்த்தனத்தைக் கேட்டவர்களில் ஆயிரத்துக்குத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்ருென்பது பேர்கள், வாதாபி கணபதி என்று வருகிறதே அது எந்த ஊர்ப் பிள்ளையார்?' என்பது பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.

தல தரிசனம் செய்தவர்கள், 'திருச்செங்காட்டங்குடி விநாயகர் பெயர் அது' என்று தெரிந்துகொள்வார்கள். பெரியபுராணம் படித்தவர்களுக்கு, "சிறுத்தொண்ட

காயனர் வாதாபிப் போரில் வெற்றிபெற்று அங்கிருந்து கொண்டுவந்து கிறுவிய மூர்த்தி அவர்' என்று தெரியும்.

வரலாற்றுச் செய்திகள்

தமிழ்நாட்டு வரலாறு படித்தவர்களோ, ஏழாவது நூற்ருண்டில் பல்லவர்களின் படை வாதாபியை முற்றுகை யிட்டதென்றும், நரசிம்மவர்ம பல்லவனுடைய சேனதிபதி யாக இருந்த பரஞ்சோதி என்பவர் அந்தப் போரில் வென்று வெற்றிக் கொடி காட்டினர் என்றும், அப்போது