பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தமிழ் நாவல்

! 04 தமிழ் காவல்

அவருடைய காவல்களில் சரித்திரத்துக்கு மாறுபாடான குறைகள் இருக்கின்றன என்று முன்னே சொன்ன பேராசிரியர் எழுதி யிருக்கிருர்.'

வடநாட்டு மொழிகளில் இராஜபுத்திரர்களின் வீரச் சிறப்பையும், மொகலாயர்களுடைய அரசவை நிகழ்ச்சி களேயும், மராத்திய மறவர்களின் மிடுக்கையும் அடிப் படையாகக் கொண்டு காவல்கள் தோன்றியுள்ளன. தமிழ் காட்டு வரலாற்றினத் தழுவி எழுந்த காவல்கள் கல்கிக்கு முன்பு ஒன்று இரண்டு இருந்திருக்கலாம், சரித்திர காவ லென்பதற்கு உரிய தகுதி அவற்றில் இருக்கும் என்பது ஐயமே. -

சரித்திர உணர்வு

தற்கு முக்கியமான காரணம், பொதுவாகத் தமிழர் களுக்குச் சரித்திர உணர்வே அடியோடு இல்லாமல் இருந்ததுதான். இலக்கியங்களிலிருந்து திட்டமாக வர, லாற்றையறிய வழி இல்லை. கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் வரலாற்றை உருவாக்க உதவும் கருப் பொருள்கள். அவற்றை ஆராய்ந்து வெளியிடும் முயற் சியை நெடுங்காலத்துக்கு முன்பே அரசியலார் தொடங்கி யிருந்தாலும், உருப்படியான வரலாறு வெளி வரவில்லை. அந்தக் காலத்துப் பாட நூல்களில் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலின் படமும் அதனேடு இரண்டு மூன்று பக்கங் களுமே சோழ சரித்திரத்தைப் பற்றித் தெரிவிக்கும் பகுதி யில் இருக்கும். அந்தப் படமும் யாரோ ஆங்கிலேயர் எடுத்த தாக இருக்கும். - -

நாளடைவில் பேரறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றை எழுதினர்கள். கல்லூரி மாணவர்கூட அவற்றை

1 . It is so with many of the famous novels of Sir Walter Scott which are full of historical errors'.—Ibid, p. iv. . . . . - -