பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

105

மிகுதியாகப் படிக்கவில்லை என்ருல், பொதுமக்கள் எங்கே படிக்கப் போகிருர்கள்? தேசிய உணர்ச்சி வீறு பெற்று. எழுந்தபோதுதான் நம்முடைய வரலாற்றிலும் கம் முடைய மொழிகளிலும் நம் பார்வை திரும்பியது. தமிழிலும் வரலாற்று நூல்கள் வந்தன.

கல்கியின் சரித்திர நாவல்கள்

வ்வளவு முயற்சிகளாலும் செய்ய இயலாத காரியத் தைக் கல்கியின் சரித்திர நாவல்கள் செய்திருக்கின்றன. மகேந்திர பல்லவனும், மாமல்லனும், புலிகேசியும், இராஜ ராஜ சோழனும், இராஜேந்திரனும் பொது மக்களுக்குச் சொந்தக்காரராகி விட்டார்கள் சரித்திரம் என்றவுடன், ஆண்டுகளும், போர்களும், அரசர் இறப்பதும், புது அரசர் பட்டத்துக்கு வருவதுமே கினைவுக்கு வருகின்றன. யாரோ ஒர் ஆங்கிலேய எழுத்தாளர், கற்பனைக் கதைகளில் பெயர்களும் தேதிகளும் தவிர மற்றவை எல்லாம் உண்மை; சரித்திரத்திலோ பெயர்களையும் தேதிகளேயும் தவிர மற்ற எதுவும் உண்மை யன்று' என்று வேடிக்கை யாகச் சொல்லி யிருக்கிருராம். கல்கியின் காவல்களைப் படித்தவர்களுக்கு ஊரும் நாடும், கோட்டையும் கொக் தளமும், அறையும் அம்பலமும் கினைவுக்கு வரும், அரசரும் அரசியரும் அமைச்சரும் படைத்தலைவரும் கண்முன் விற்பார்கள். காதலும் வீரமும், கலேயும் தொழிலும்

இன்பத்தை உண்டாக்கும்.

சரித்திரக் கதைகள்

ரொமான்ஸ் அல்லது அற்புத நெடுங்கதையாதலின் சரித்திரக் கதைகளில், அற்புதம் விளைவிக்கும் நிகழ்ச்சி

1. ‘In fiction everything is true except names and dates; in -

shistory nothing is true except names and dates.”—Quoted dy Hudson in his “An Introduction to the Study of Literature.”