பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழ் நாவல்

வெற்றிமாலை சூடிய மாமல்லர் என் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவதற்கு வருவார். அப்போது தான் புறப்படுவேன். நீர் அனுப்பிப் போகமாட்டேன். பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போகமாட்டேன். யானை மீது அனுப்பினாலும் போகமாட்டேன்.' (ப.722-3) இது அவள் செய்த சபதம்.

'சிவகாமியின் சபதம்' என்ற பெயர் இரண்டே சொற்களை உடையது. ஆனால் அதனால் குறிக்கப் பெறும் சபதம் இத்தனை சொற்களில், கோபக் கனலின் கொழுந்தை வீசிக்கொண்டு வருகிறது. அந்தச் சபதம் தோன்றுவதற்குக் காரணமாக உள்ள முன் நிகழ்ச்சிகளும், அது நிறைவேறியதைச் சொல்லும் பின் நிகழ்ச்சிகளும் நான்கு பாகங்களையும் 209 அத்தியாயங்களையும் 1011 பக்கங்களையும் கொண்ட இந்த நாவலுருவத்தை எடுத்திருக்கின்றன.


சபதம் நிறைவேறல்

சிவகாமி செய்த சபதத்தை மாமல்லர் நிறைவேற்றுகிறார் என்பது உண்மை; ஆனால் அந்தச் சபதத்தை அவள் செய்தபோது அவள் அகக்கண்ணில் எந்தக் காட்சியைக் கண்டாளோ அது நிறைவேறவில்லை. முன்பே மாமல்லருடைய இதய பீடத்தில் ஏறிக்கொண்டிருந்த அவள், அவருடைய மனமாலையை ஏற்று மனைவியாகிப் பின் பல்லவ சிங்காதனத்தில் மாதேவியாக, பட்டத்து ராணியாக, அமரலாம் என்ற கனவைக் கண்டாள். அந்தக் கனவு பலிக்கவில்லை. மாமல்லரின் தந்தையாராகிய மகேந்திரரும் சைவப் பெரியாராகிய அப்பரும் விரும்பியபடி அந்தக் கலையரசி தன்னுடைய கலையைத் தெய்வத்திற்கே அர்ப்பணம் செய்து, இறைவனையே பதியாக வரித்துக்கொண்டு விட்டாள். "ஐயோ பாவம்! அவளையே