பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் நாவல்கள்

109

சிங்காதனத்தில் ஏற்றி யிருக்கலாமே கல்கி?" என்று தோன்றலாம். சரித்திரத்தில் சிவகாமி பட்டத்தரசி என்று இருந்திருந்தால் கல்கியும் அப்படிச் செய்திருப்பார். அதில் அப்படி இல்லையே!

திசை திருப்பியது

கேந்திரவர்ம பல்லவர் தம் புதல்வராகிய மாமல்ல ரிடம் அன்புடையவரே; அவருடைய கலத்தை விரும்புபவரே. ஆயினும் மகேந்திரராகிய தனி மனிதருக்குப் பிள்ளை அவர் என்று பாராமல் பல்லவ சிங்கா தனத்தில் ஏறும் உரிமையுடையவர் என்று பார்த்தார். அரசருக்குத் தம் சொந்த நலன்களைவிட நாட்டின் நலன், அரசின் நலன் பெரிது. ஆகவே, பேரரசராக வரவிருக்கும் ஒருவர் அரச குலத்தில் உதித்த இளவரசி ஒருத்தியைத் திருமணம் செய்துகொள்வதே ஏற்புடையது என்று எண்ணியதனால், தம் புதல்வருக்குப் பாண்டிய இளவரசியைத் திருமணம் முடிப்பதற்கு முயன்றார், பாண்டிய மன்னனுடைய உறவு கிடைப்பதும் மற்றொரு பயன். இதற்குத் தடையாக நின்றது சிவகாமி-மாமல்லர் காதல். நான் ஏன் அரச குலத்தில் பிறந்தேன்? இந்த அரசையே தியாகம் செய்துவிட்டுச் சிவகாமியோடு இனிமையாகப் பேசி நாளெல்லாம் இன்பமாகக் கழித்துக்கொண்டு வாழலாமே! என்று நினைத்தவர் மாமல்லர். அத்தகைய ஆழமான காதலைத் திசை திருப்பித் தம்முடைய விருப்பத்தைச் சாதித்துக்கொள்ள மகேந்திரருக்கு எத்தனை மன வலிமை வேண்டும்! .

மகேந்திரரின் தோற்றம்

ந்தக் கதையில் முக்கால் பகுதியில் அதாவது: மூன்று பாகங்களில் நடு நாயகராக வருகிறார் மகேந்திரர்.