பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தமிழ் நாவல்

கல்கி எழுதிக் காட்டும் ஓவியத்தில் அவர் ஆஜாநுபாகு வாக நிற்கிறார். அவருடைய கம்பீரமான முகத்தில் பல நூறு ஆண்டுகளாக வாழையடி வாழையென வந்த அரச குலத்தின் வீரக்களை பொலிகிறது; அதனோடு சிறந்த கல்வி ஆராய்ச்சியினாலும் கலைப்பயிற்சியினாலும் ஏற்படும் கல்வித் தேசும் ஒளிர்கிறது. காஞ்சிமா நகரில் புகழ் பெற்ற பொற்கொல்லர்கள் சித்திர விசித்திர வேலைப்பாடு களுடன் செய்த முடி, குண்டலம், தோள்வளே, வீரக்கழல் முதலிய அணிகலன்களே அவர் அணிந்திருக்கிருர். வீரத் திருமகள் குடிகொண்ட அவர் அகன்ற மார்பை வகை வகையான வண்ணங்களுடன் ஒளிவிடும் நவமணி மாலைகள் அணி செய்கின்றன. அவர் அணிந்ததனுல் பொன்னடை பொலிவு பெறுகிறது. (ப. 86. )

சமரச நோக்கு

முதலில் சைன சமயத்தைத் தழுவிய அவர் திருநாவுக்கரசருடைய பெருமையை அறிந்து சைவராக மாறினவர். அப்பெரியாருடைய பாடல்களில் ஈடுபட்டு, "நான் காட்டுக்கு அரசன்: நீங்கள் காவுக்கு அரசர்" என்று பாராட்டுகிருர். சைனர்களும் பெளத்தர்களும் காபாலியர்களும் அரசியலிற் புகுந்து இடையூறுகளே விளேத்தனர். அவர்களிடம் அவருக்குக் கோபம் இருக்கிறதேயன்றி, மற்ற வகையில் அவர் சமய சமரச கோக்குடையவராகவே இருக்கிருர். கற்கோயில் களில் சிவபெருமானேயும் பார்வதி தேவியையும் ஒரு கோயிலிலும், திருமாலையும் திருமகளையும் ஒரு கோயிலிலும், புத்தர் பெருமானே ஒரு கோயிலிலும், வர்த்தமான மகாவீரர் திருவுருவத்தை ஒரு கோயிலிலும் கிறுவ எண்ணியிருக்கிருர் (ப. 131). முடிந்தால் கிறிஸ்துவ மதத்தில் எது தெய்வமோ அதை ஐந்தாவது கோயிலில்