பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

113


(ப. 44, 145,222.) வேண்டியவர்களுக்குத் துணைபுரி கிருர். வேறு ஒருவர் எழுதியவைபோல ஒலைகளை எழுதி யனுப்புகிருர் (ப. 359.) அவர் செய்யும் மகேந்திர ஜாலங்கள் யாவரையும் பிரமிக்க வைக்கின்றன. அவ ருடைய தந்திரங்களே அறிந்த புலிகேசியே, "அர்த்த சாஸ் திரத்தை எழுதிய கெளடில்யர் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்' என்று வியப்படைகிருன் (ப. 566). மிக்க தந்திரசாலியாகிய நாகநந்தி எத்தனையோ வகைகளில் இடையூறுகளே உண்டாக்குகிருர். புகை புகா வாயிலும் புகும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது. அவர் போடுகிற முறுக்குக்கெல்லாம் எதிர்முறுக்குப் போட்டு அவருடைய தந்திரங்கள் அத்தனையும் பயன்படாமல் ஒழியும்படி செய்கிருர் மகேந்திரர்,

மணம் பெறாமல் செய்தல்

தம்முடைய புதல்வராகிய மாமல்லர் சிவகாமியை மணக்கக் கூடாது என்பது அவர் கருத்து. அந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவொட்டாமல் பல தடவை பிரித்துப் பிரித்து விடுகிருர். பிரிவினல் அவர்களுடைய காதல் வலிமை பெறுவதை அறிகிருர் (ப. 455). மாமல்லர் எழுதும் காதல் ஒலேகளேத் திருடிவரச் செய்கிருர். அவர் களுடைய காதலே கிறைவேற ஒட்டாமல் தடுப்பதற்கு அவர் சுயநலம் காரணம் அல்ல, இதை அவரே சொல் கிருர். ஒற்றர் கலேவகிைய சத்துருக்னனைப் பார்த்து, 'சத்ருக்ளு இராஜ்யம் ஆளுவதைப்போல் கொடுமை யான காரியம் வேறு ஒன்றும் இல்லை. இராஜ்யத்தின் ான்மைக்காக நான் இந்த சேத்தனமான காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. மாமல்லனுடைய குழங்தை உள்ளத்தைக் கீறிப் பார்க்கும் பயங்கரமான பாவத்தைச்