பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழ் நாவல்

செய்யப் போகிறேன்" என்று மிகவும் இரக்கத்தோடு சொல்கிறார் (ப. 293).


தம் தந்திரங்களில் ஏதும் பலிக்காமற் போகவே, சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்றபடி சிவகாமியினிடமே, "தாயே! எனக்கு வரம் தர வேண்டும்" என்று இரக்கிறார். "உன்னிடம் வரந்தான் கோருகிறேன். அதுவும் எனக்காகக் கோரவில்லை. பல்லவ சாம்ராஜ்யத்துக்காகக் கோருகிறேன்" என்று கெஞ்சுகிறார். அவர் என்ன சொல்லியும் சிவகாமி இணங்கவில்லை,"மாட்டேன். மாட்டேன்" என்று அலறுகிறாள். அப்போது, "சிவகாமி, நீ ஐயித்தாய்; நான் தோற்றேன்" என்று ஒப்புக் கொள்கிறார். (ப., 460). ஆனால் எப்படியும் அவளுடைய கண்ணம்பிலிருந்து தம் குமாரரைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் போகவில்லை (ப. 543). சிவகாமி வாதாபியில் சிறை இருந்தபோது மாமல்லர் மாறுவேடத்தோடு அங்கே போய் அவளை அழைக்கச் சென்றிருந்தார். அப்படி அவர் அழைத்து வந்திருந்தால் அவளைத் தாமே மணந்து கொள்வதென்று மகேந்திரர் முடிவு செய்திருந்தாராம் (ப. 751). அவள் வாதாபியிலிருந்து வரவில்லை. தம்முடைய எண்ணம் நிறைவேறாமல் போனதனால் இறுதியில், தம் வாழ்வு இன்னும் சில நாட்களே என்பதை உணர்ந்தபோது அவர் தம் புதல்வரிடத்தில் தம் கோரிக்கையைச் சொல்கிறார். சிவகாமியை விடுத்துப் பாண்டிய, ராஜகுமாரியை மணந்து கொள்ள் வேண்டும் என்றும், அதுவே அரசகுல தர்மமென்றும் எடுத்துக் காட்டுகிறார். அரசர்களின் தர்மம் வேறு, பொது மக்களுடைய தர்மம் வேறு என்று கூறித் தம் புதல்வர் மனம் நெகிழும்படி பலவற்றைச் சொல்லித் தமக்கு வாக்குறுதி செய்து தரும்படி செய்து விடுகிறார் (ப. 752). தாம் செய்யப் புகுந்த பல காரியங்கள் நிறை