பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழ் நாவல்

தம்பியென்பது மகேந்திரருக்குத் தெரியும். "நாகநந்தியைவிடுதலை செய்து என்னுடன் அனுப்பப் போவதில்லையா?" என்று ஆங்காரமான குரலில் கேட்கிருன் புலிகேசி. "சக்கரவர்த்தி கோரில்ை அவ்விதமே செய்யத் தடை இல்லே' என்கிருர் பல்லவ மன்னர். அவன், 'வாதாபிச் சளுக்க குலத்தார் யாரிடமும் எந்தக் கோரிக்கையும் செய்து கொள்வதில்லை' என்று மிடுக்காகச் சொல்கிருன். அதற்கு எதிரே, பேசத் தெரிந்த மகேந்திரர், "காஞ்சிப் பல்லவ குலத்தினர் யாருக்கும் கோராத வரத்தைக் கொடுப்பதில்லை' என்று பளிச்சென்று சொல்கிருர் (L. 567). -

சமாதானம் செய்துகொண்டால் புலிகேசி போய். விடுவான் என்று கோட்டையைத் திறந்துவிட்ட மகேந்திரர். வாதாபிப் படைகள் போகாமல் இருந்து சேதம் விளைப் பதை உணர்ந்து படையுடன் சென்று மணிமங்கலத்தில் எதிர்த்துப் பகைப்படையை ஒட்டுகிருர் ஆலுைம் போகிற. போக்கில் புலிகேசி வீசி எறிந்த ஆயுதத்தால் காயமடைந்து படுத்த படுக்கையாகிருர். தாம் நிறைவேற்ற இருந்த பல கலேப் படைப்புக்களேயும் முடிக்க இயலாமல் புகழுடம்பு பெறுகிருர்.

மாமல்லர் இயல்பு

வருடைய அருமைப் புதல்வர் நரசிம்மவர்ம பல்லவர் இளம் பிராயத்திலேயே மற்போரில் வெற்றி பெற்றமையால் மாமல்லர் என்ற சிறப்புப் பெயரை அடைகிருர். அவர் வீரம் நிறைந்தவர்; தோள் தினவு உடையவர். தம்மைக் காஞ்சிக் கோட்டைக்குள் இருத்தி வைத்துவிட்டு மகேந்திரர் சென்றுவிட்டாரே என்று வருந்துகிருர், அவருக்கும் வெளியே சென்று பகைவரை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு (ப. 136). இரத்த