பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

117

வெள்ளம் ஒடும் போர்க்களத்தினிடையே வெற்றிமகள் குட்டும் மாலேயுடனே திரும்பிவந்து தம் காதலியைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிருர் (ப. 295). கங்க அரசன் துர்விதேன் காஞ்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிருன் என்பதை அறிந்து, "ஐயோ! நான் இந்தக் கோட்டைக்குள் அடைந்து கிடக்கிறேனே!" என்று வருந்துகிருர்(ப. 305). அவர் தங்தையார் திருக்கழுக்குன்றத்திலுள்ள படை களுடன் சென்று துர்விதேனைப் தடுத்துப் போர் செய்யும்படி அவருக்குச் சொல்லி யனுப்பியபோது அவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லே இல்லை. ஆவேசம் வந்தவரைப் போல ஒடிச் சென்று செய்தி சொன்ன சத்துருக்னனைத் தழுவிக் கொள்கிருர்(ப. 311). வாதாபிப் படை கோட்டையைச் சூழ்ந்துகொண்டு கின்ற போது மற்றவர்கள் மறுத்தாலும், அவர் வெளியிற்சென்று போரிட வேண்டுமென்று ஆத்திரத்துடன் பேசுகிருர் (ப. 471). புலிகேசி சமாதானத்துக்கு வந்தபோது, அதை ஏற்றுக் கொள்ளாமல் போரிட்டு வெல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிருர் (ப. 533).

சிவகாமியிடம் காதல்

த்தகைய மாவீரர் கலையரசியாகிய சிவகாமியிடம் இணையில்லாத காதல் கொண்டிருக்கிரு.ர். இளம் பருவத்தில் அவர் தங்தை ஆயனச் சிற்பியைப் பார்க்கப் போகும்போது உடன் செல்வார். சிவகாமியுடன் விளையாடிப் பழகுவார். பருவம் வந்தபோது இந்த அன்பு காதலாக மாறுகிறது. அந்தக் காதலர் இருவருடைய எண்ணங்களையும் உரையாடல்களையும் எத்தனையோ வகையில் ஆசிரியர் எழுதியிருக்கிரு.ர். பல இடங்களில் கல்கி எழுதும் வாக்கியங்கள் காவிய கதியில் மிடுக்கு நடை போடுகின்றன.