பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தமிழ் நாவல்

என்றும் அவளுக்குக் கொடுத்த உறுதியை நிறைவேற்ரு மையால் அவளே மறக்கமுடியவில்லையென்றும், என்று அது கிறைவேறுகிறதோ அன்றே அவள் சினேவு அடியோடு அகலும் என்றும் கூறுகிருர் (ப. 793). சிவகாமியின் காதல் ஐயமும் ஆங்காரமும் நிறைந்ததென்றும், பாண்டியன் மகள் பிரேமை சாத்விகமானதென்றும் எண்ணிச் சிந்தனையில் ஆழ்கிருர் (ப. 794),

வாக்கை நிறைவேற்றுதல்

தாம் கொடுத்த வாக்குறுதிப்படியே படையெடுத்துச் சளுக்கரை வென்று வாதாபியைத் தீயிட்டு எரிக்கிருர். சிவகாமியினிடம் பழைய அன்பு வரவில்லை. அவளேச் சக்தித்தவுடன் அன்பான மொழிகளைக் கூறவேண்டும் என்றே எண்ணிப் போனவருக்கு, தம் அன்புக்குப் பாத்திரமான கண்ணபிரான் இறந்து கிடப்பதைக் கண்டு மனம் கடினமாகி விட்டது (ப. 984). சிவகாமியினிடம் கேரிலே பேசாமல் ஆயனரைப் பார்த்துப் பேசுகிருர் (ப. 983). அவருடைய வீரத்தையும் காதலையும் வேதனே யையும் கோபத்தையும் காட்டும் இடங்கள் பல பல.

சிவகாமி

னி, சிவகாமியைப் பார்ப்போம். ஆயனச் சிற்பியின் மகளாகப் பிறந்த அவள் ஆடல் பாடல்களிலும் அழகிலும் சடும் எடுப்பும் அற்றவளாக விளங்குகிருள். அவளுடைய உடம்பெல்லாம் கல உள்ளமெல்லாம் காதல். மாமல்ல ரிடம் அவளுக்கிருந்த காதல் எழுத்தில் அடங்காதது. அடிக்கடி அவரைத் தாமரைக் குளக்கரையில் கண்டு குலாவுகிருள். ரதி என்னும் மானும், ஒரு கிளியும் அவளுக்குத் துணையாக இருக்கின்றன. அவற்ருேடு