பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்கியின் நாவல்கள்

123

3. கல்கியின் காவல்கள் 123;

லேயே அவரைச் சந்திக்கிருேம். கடைசியில் சில அத்தி யாயங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அவர் வருகிருர். திடீர் திடீரென்று அவரை எங்கெங்கோ பார்க் கிருேம். வெளிப்படையாக வராத இடங்களில் அவரு டைய காகப்பாம்புச் சீறலைக் கேட்கிருேம், புலிகேசியின் ஒற்றராகத்தான் அவர் முதலில் புறப்பட்டார். ஆனல் அவர் அஜந்தாச் சிந்திரங்களிலே மூழ்கியதல்ை கலைப் பித்துப் பிடித்தது. காஞ்சிக்கு வந்தபோது சிவகாமியி' னிடம் அஜந்தா ஒவியத்தின் பேரழகு இருப்பதைக் கண்டு வியந்தார். பல சமயங்களில் அவளைச் சந்தித்தார். ஒரு முறை அவளுடைய நடனத்தைக் கண்டு சொக்கிப் போய்விட்டார், தம்முடைய தம்பிக்கு எழுதிய ஒலேயில், 'நீ பல்லவ சாம்ராஜ்யத்தையும் காஞ்சி சுந்தரி' யையும் எடுத்துக்கொண்டு இந்த நடன சுந்தரியை எனக்கு. அளி' (ப. 565) என்று எழுதினர். மாறுவேடம் புனே' வதிலும் தந்திரங்கள் செய்வதிலும் அவரை மிஞ்சியவர் மகேந்திர பல்லவர் ஒருவர்தாம். புலிகேசியும் அவரும் இரட்டைப் பிள்ளைகள். ஆதலால் சில சமயங்களில் புலிகேசி போலவே கோலம் பூண்டு சில காரியங்களேச் செய்திருக்கிரு.ர். -

சிவகாமியைப் பெறுவதற்காக அவர் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார். அவர் அவளுக டைய அழகுக்காக ஆசைப்படவில்லே. அவளிடம் இருந்த கலேக்கே அவர் அடிமையாளுர். தம் தம்பி புலிகேசியி னிடம் இதை விளக்கமாகச் சொல்கிருர்; 'தம்பி, சிவகாமி யிடம் நான் காதல் கொண்டேன்; பிரேமை கொண் டேன்; மோகம் கொண்டேன்; இன்னும் உலகத் துப் பாஷைகளில் என்ன என்ன வார்த்தைகள் அன்பையும் ஆசையையும் குறிப்பதற்கு இருக்கின்றனவோ, அவ்வளவு வார்த்தைகளையும் குறிப்பிட்ட போதிலும் காணுது' என்று சொல்லக்கூடிய வண்ணம் அவள்மீது பிரியம்: