பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

தமிழ் நாவல்

கொண்டேன். காதல், பிரேமை, மோகம் என்னும் வார்த் தைகளே இந்த உலகம் தோன்றிய நாள் முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை உபயோகித் திருக்கிருர்கள். ஆனல் அந்த வார்த்தைகளின் மூலம் நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்க மாட் டார்கள். என்னுடைய காதலில் தேக தத்துவம் என்பது சிறிதும் கிடையாது (ப. 684) என்று அந்தக் காதலின் தன்மையை விளக்குகிருர். -

சிவகாமி செய்த சபதத்தை சிறைவேற்ற வாதாபியைச் சுட்டெரித்து அவளுடன் அஜந்தாவுக்கு ஓடிவிடத் தயாராக இருந்தார் (ப. 877).

அவருடைய கலைப் பித்திலும் தந்திரங்களிலும் போட்டி யாக இருந்தவர் மகேந்திரர். அவரே அந்தப் பிட்சு கலா ரசிகர் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தார். சிவகாமி -யிடம் நாகநந்தி கொண்ட பிரேமைக்குப் போட்டியாக இருந்தவர் மாமல்லர். அதனல் அவரைக் கண்டால் இந்தப் .பிட்சுவுக்குப் பொருமை உண்டாயிற்று. இறுதியில் தம் முடைய தந்திரங்கள் பலிக்காமல் போகப் பரஞ்சோதியின் வாளால் கையை இழந்து மறைகிருர்.

இன்னும் பல பாத்திரங்களைக் கல்கியவர்கள் படைத்து இந்தப் பெரிய காவலில் உலவ விட்டிருக்கிரு.ர். அவர்களைப் பற்றியெல்லாம் பேச நேரம் ஏது? ...

ஜாலங்கள்

ல்கி தம் தமிழ் நாவலில் சில மகேந்திர ஜாலங் களைப் பண்ணியிருக்கிருர், ஒருவர் ஒரு செய்தியைச் சொல்லும்போது, "இதென்ன இப்படிப் பேசுகிருரே!” என்று எண்ணும்படி இருக்கும்; அடுத்தபடி அதற்குச் சமாதானம் வரும்போது அவருடைய பேச்சுச் சாமர்த் தியம் வெளியாகும். இதோ இரண்டு உதாரணங்கள்: