பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் காவல்கள்

127


சுவையும் விறுவிறுப்பும் உள்ள சரித்திரக் கதையைப் பின்னிப் பாத்திரங்களைப் படைத்து அவர்களின் ஓவியம் நம் மனத்தில் பதியும்படி செய்திருக்கிறார் ஆசிரியர்.

அலையோசை

நாவல் இலக்கியந்தானா?’ என்ற கேள்வி இந்த நாட்டில் நெடுநாளாக இருந்து வந்தது. இங்கேயாவது, பரபரப்பு ஊட்டும் மூன்றாந்தர நாவல்கள் கிழ்த்தரமான உணர்ச்சியைக் கிண்டிவிட்டமையால் பெரியவர்கள் அந்தக் காலத்தில் அவற்றைப் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள். மேல் நாட்டிலோ அந்தக் காலத்தில் நல்ல நாவல்கள் இருந்தும் நாவலைப்பற்றிய நல்ல கருத்து, சிலரிடம் இருக்கவில்லையென்று தெரிகிறது.[1]

ஆனால் நாளடைவில் நாவலின் இலக்கிய மதிப்பைத் தெரிந்து யாவருமே பாராட்டத் தொடங்கினார்கள். மற்ற இலக்கியங்களில், எத்தகைய இன்பமும், நிறைவும், மக்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் பண்பும் இருக்கின்றனவோ அத்தகையவற்றை நாவல்களிலும் காணலாம் என்பது உறுதியாயிற்று. ராபர்ட் விட்டெல் (Robert Liddel) என்பவர் சொல்கிறார்: ‘மனித இயல்பை மிக நன்றாகத் தெளிந்த தெளிவு, பலவேறு மனித இயல்புகளை இனிமையாகச் சித்திரிக்கும் பண்பு, சாதுரியமும் நகைச்சுவையும் இணைந்த இணைப்பு, பொறுக்கு மணிகளாகிய சிறந்த


  1. Robert Liddell: A Treatise. on the Novel, p. 13: "There are many who would laugh at the idea of a novelist teaching either virtue or nobility--those, for instance, who regard the reading of the. inovels as a sin, and : those who thing it to be'. 'simply an ideas 'pastime.'--Anthony Trollope: An Autobiography.