பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

தமிழ் நாவல்

சகோதரிகள் என்று தெரிய வருகிறது. தாரிணியிடம் முதலில் காதல் கொண்ட ராகவன் அவளுடைய முகவெட்டு, தன்னிடம் இருந்தததனால் தான் கிட்டாவையர் வீட்டில் தன்னை விரும்பினான் என்று சீதா உணர்கிறாள்: சீதாவுக்கு இன்னலின் மேல் இன்னல் வருகிறது. கடைசி யில் அவள் தன் கணவன் மடியில் உயிர் விடுகிறாள்.

தாரிணி தேசத் தொண்டையே வாழ்வாக்கிக் கொண்டவள்; அகதிகளுக்கு உதவி செய்யப்போய் ஒரு கையையும் ஒரு கண்ணையும் இழக்கிறாள். முதலில் அவளைக் காதலித்துப் பின்பு லலிதாவை மணந்து, மறுபடியும் தாரிணியின் காதலில் அலைப்புண்டு, அவளையும் மணந்து வாழ விரும்பி, அவள் சூரியாவை மணக்க இருப்பதை அறிந்து மனம் கசந்து, சீதா இறந்துவிட்டதாக எண்ணிப் பாமாவை, மணம் புரிய எண்ணிய ராகவன் கடைசியில் ரஜனீபூர்ச் செல்வம் வருகிற ஆசையால். கையும் கண்ணும் இழந்த தாரிணியைக் கல்யாணம் செய்து கொள்கிறான்.

மணங்கள்

தில் வரும் மணங்கள் யாவுமே நினைப்பதொன்றும் நடப்பதொன்றுமாகவே இருக்கின்றன. கதையின் தொடக்கத்தில் லலிதாவைப் பார்த்து மணம் செய்து கொள்ள வரும் ராகவன் அவளை மணக்காமல் சீதாவை மணக்கிறான். தாரிணியை மணப்பதாக உறுதி செய்த சூரியா, அவள் சீதாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவளை விட்டுவிட்டுப் பாமாவை மணந்து கொள்கிறான். பாமாவை மணக்க எண்ணிய ராகவன் தாரிணியைக் கல்யாணம் செய்து கொள்கிறான்.

ஓர் ஆடவனும் ஒரு பெண்மணியும் இளமை எண்ணங்களாலும், ஓரளவு ஒத்த மன நிலையுடையவராக இருந்தமையாலும் சில காலம் பழகிக் காதல் அரும்ப, அது