பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3. கல்கியின் நாவல்கள்

139

கசப்புத் தோன்றத் தொடங்குகிறது. அதன் விளைவாக அவள் ராகவனுடன் உரையாடும்போது அவள் கூற்றில் எதிர்ப்பு மனப்பான்மை குரல் காட்டுகிறது. தாரிணியோடு பேசுகையில் பொருமையும் கிண்டலும் முகத்தை முறிக்கும் இயல்பும் எதிரொலிக்கின்றன. ஆனால் அவள் தன்னைத் தண்ணிரில் மூழ்காமல் காப்பாற்றியபோது அவளிடம் பேசும் சீதா உருகிப்போகிறாள். அப்போது அவள் வாய்மொழியில் அன்பும் உருக்கமும் மணக்கின்றன. பட்டாபியின் வீட்டில் அவள் இருக்கும்போது எல்லோரும் அவளுக்கு மரியாதை செய்கிறார்கள். அவளுடைய செல்வாக்கு உயர்கிறது. அப்போது அவள் கூற்றில் எடுத்துப் பேசும் இயல்பும், அகம்பாவமும் தலை நீட்டுகின்றன. கடைசியில் மகாத்மா காந்தி படத்தின் முன் விழுந்து, பிரதிக்ஞை செய்த பிறகு அவளுடைய வார்த்தையில் சோகம் கலந்த பணிவு இழை யோடுகிறது. இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

வருணனைகள்

உணர்ச்சியையும் அநுபவத்தையும் விளக்கும் வருணனைகளில் சில புதுவிதமான உத்திகளை இவர் ஆளுகிறார். சிவகாமியின் சபதத்தில் அருமையாகக் கண்ட இதனை இந்த நாவலில் பல இடங்களில் பல வகையில் பயன்படுத்தி யிருக்கிறார்.

ராஜம்பேட்டையில் பெண் பார்க்க வந்த ஶ்ரீநிவாசன் முதலியவர்கள் சீதாவைச் சமர்த்து என்று வாய்க்கு வாய் புகழ்கிறார்கள். அவளுக்கு உள்ளே ஆனந்தம் பொங்குகிறது. அதை வருணிக்கிறார் ஆசிரியர்:

'கிட்டாவையரின் வீடு நோக்கிச் சீதா சென்று கொண்டிருந்தபோது வானவெளியில் தேவர்களும் கந்தர்