பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

7

"நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீ இக்
குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி"[1]

என்று நக்கீரர் பாடுகிறார். நச்சினார்க்கினியர், 'பொருளொடு புணராப் பொய்ம்மொழியும் மெய்ம்மொழியுமாகிய உரைகள் பலவற்றைப் பலகாற் சொல்லி' என்று உரை எழுதுவர்.

இவற்றால், தொடர்ந்து வரும் புனை கதைகளைச் செவிலிமார் சொல்லும் வழக்கம் இருந்ததை உணரலாம். புனைந்தும் நகுவித்தும் பொழுது போக்குவதற்கு இவை பயன்பட்டன. புனைந்து சொல்பவை கட்டுக் கதைகள் என்றும், நகுவிப்பவை உண்மைக் கதைகள் என்றும் கொள்ளலாம்.[2] பேராகிரியர் உதாரணமாக எடுத்துச் சொல்லும் யானைக்குருவி நட்பு பஞ்சதந்திரக் கதைகளையும் ஈசாப்புக் கதைகளையும் நினைப்பூட்டுகின்றன, விலங்கு,பறவை முதலியவற்றைப் பாத்திரங்களாகக் கொண்டு படைத்த கதைகள் அவை. உவமையாகவும் உருவகமாகவும் வரும் 'பாரபிள்' 'ஃபேபிள்' (Parable Fable) என்பன போன்றன அவை என்று கொள்ளலாம். பொருளொடு புணர்ந்த நகை மொழி என்பது மக்களின் இயல்பை உள்ளபடியே சொல்லி நகை தோற்றும்படி சொல்லும் கதை. இககாலத்தில் நாம் கிண்டல் (Satire) என்று சொல்வதைப் போன்றது அது என்று ஊகிக்கலாம்.

தலைவன் பிரிவினால் துயருற்றவர்களின் எண்ணத்தை ஈர்க்கும் நெடுங்கதைகள் இவை. பேராசிரியர் தொடர் நிலை என்று இரண்டையும் சொல்கிறார்.நெடுநேரம் பொழுது போக்குவதற்காகச் சொல்வன ஆதலின் அவற்றிற்கு நீளம்


  1. நெடுதல் வாடை, 152-4.
  2. அ. ச. ஞானசம்பந்தன்: இலக்சியக்கலை, ப. 265.