பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழ் நாவல்

இன்றியமையாதது அல்லவா? பெரும்பாலும் தலைவி மாலைக் காலத்தில் பிரிவை எண்ணி வருந்துவாள். மாலை என்பது இரவின் முதல் யாமம்,

"காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய்"[1]

என்று வள்ளுவரும் கூறினார் அல்லவா?

ஆகவே செவிலியர்களுக்குக் கதை கூறும் வேலை பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் இருக்கும். இரவிலே பொழுது போவதற்காகக் கதை சொல்வது என்பது. உலகம் முழுவதும் அறிந்த செய்தி. அராபியக் கதைகள் என்ற நெடுங் கதைகள், ஓர் அரசி இரவு முழுவதும் கதை சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தலை தறிக்கப்படும் என்ற நிபந்தனையின்மேல் ஆயிரத்தோர் இரவுகள் சொன்ன கதைகள் என்பதும்,[2] விக்கிரமாதித்தன் கதைகள் முப்பத்திரண்டு பதுமைகள் பொழுது போக்கச் சொன்ன கதைகள் என்பதும், மதனகாமராஜன் கதைகள் என்பன பன்னிரண்டு இரவுகளைக் கழிக்கச் சொன்னவை என்பதும் இங்கே நினைவுக்கு வருகின்றன.

கூந்தல் நரைத்த செவிலிமார் கதைகள் சொல்வதில் வியப்பு ஏதும் இல்லை. நம்முடைய பாட்டிமார்கள் கதை சொல்வதில் பேர்போனவர்கள் அல்லவா? பாட்டி கதை என்பது உலகத்தில் எல்லா நாட்டுக்கும் பொதுவான வழக்கந்தான். குழந்தைகள் தூங்குவதற்காகப் பாட்டிமார்கள் இரவிலே கதை சொல்லி வந்தார்கள்.

"பாட்டி பாட்டி ஓர் கதைசொல்ல மாட்டாயா
படுத்துக்கொள் வோம்என்று சொல்லிவிட்டால்
நீட்டி இனித்த சுவைக்கதை எத்தனை
நேரம் சொல் வாள்! அதில் ஈடுபட்டால்
  1. திருக்குறள், 1227.
  2. E. M. Fotster; Aspects of the Novel p. 42.