பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

9

"வீட்டில் இருக்கும் எங் கள்மனம் காட்டிலும்
விண்ணிலும் ஓடி விளையாடும்;
நாட்டில் இல் லாதபுத் தம்புதுக் காட்சிகள்
நனவினி லேகன வாக்கிவிடும்."

பழைய காலத்துப் பொய்க்நொடி பகரும் செம்முது செவிலியர் பரம்பரையில் வந்தவர்கள் இவர்கள். இந்தக் காலத்தில் அந்தப் பாட்டிமார்கள் எங்கே? அது வேறு விஷயம்.


நாட்டுக்கு ஏற்ற பண்பு

தை கேட்கும் இயல்பு எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. ஆயினும் கதைகளின் போக்கில் அந்த அந்த நாட்டின் சிறப்பியல்புகள் மணப்பதைக் காணலாம். கடற்கரைப் பிராந்தியங்களில் கடற்பயணத்தையே தம் வாழக்கையின் பெரும் பகுதியாகக் கொண்ட சமுதாயத்தில் வழங்கும் கதைகளில் கதாநாயகன் பல கப்பல்களைக் கட்டிச் செலுத்துவான்; கடற்போர் செய்வான். கடலின் நடுவிலேயுள்ள தீவிலுள்ள அதிரூபசுந்தர மோகினியைக் கண்டு காதல் கொள்வான். மலைப்பகுதிகளை அடுத்து வாழும் சமுதாயத்தில் வழங்கும் கதைகளில் மலை உயர்ந்து நிற்கும். அந்த மலையின் மேல் ஏறி விற்பவன் வீரன்.

இந்த வகையில், பாரதநாட்டுக் கதைகளில் இந்த நாட்டுப் பண்பு மலர்ந்தது; மணந்தது. இந்த நாட்டில் வாழ்க்கையும் இறையுணர்வும் பிரியாமல் ஒன்றி இணைந்திருப்பன. வாழக்கை வகைகளிலெல்லாம் கடவுள் உணர்வு புகுந்து விளையாடும். இவர்களுடைய லட்சியக்கனவோடு இறையுணர்வு நின்றுவிடவில்லை. இவர்களுடைய அணிகளும் ஆடைகளும், விருந்தும் விழாவும், கதையும் கவிதையும் கடவுள் உணர்வோடு ஒட்டியே வளர்ந்தன. பொழுது