பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

15

அரசியலார் ஆங்கிலத்தையே ஆட்சி மொழியாகக் கொண்டார்கள், சட்டமும் விதிகளும் ஆங்கிலத்தில் இயற்றினார்கள். ஆங்கிலத்தைக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கற்பிக்கலானார்கள். பாரத நாட்டு மக்கள் ஆங்கிலத்தைக் கற்று அதில் பேசி அதில் உள்ள இலக்கியங்களைச் சுவைக்கவும் தொடங்கினார்கள், இந்தத் துறையில் மிகுதியாக ஈடுபட்டவர்கள், தமிழ் நாட்டினரே. அதே சமயத்தில் ஆங்கிலத்தைப் பரப்புவதைவிடத் தம் சமய நெறியைப் பரப்புவதில் கண்ணாக இருந்தார்கள் மேல் நாட்டுப் பாதிரிமார்கள், பணக்காரர்களையும் உத்தியோகஸ்தர்களையும் ஆங்கிலத்தின் மூலம் கவர்ந்து, ஆங்கிலத்திலுள்ள சமய நூல்களைப் படிக்கச்செய்து, ஆங்கிலத்தில் பிரசாரம் செய்வதால் கிறிஸ்தவ சமயம் நகரங்களில் சில இடங்களில் மட்டும் இருக்கும் என்பதை உணர்ந்தார்கள். இந்த நாட்டு மூலை முடுக்குகளிலெல்லாம் தம் சமய போதனை பரவ வேண்டுமென்பது அவர்களுடைய ஆசை.

ஆகவே எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் தமிழில் தம் சம்ய போதனைகளை அச்சிட்டுத் தரவேண்டும். சொல்ல வேண்டும். இதுதான் சரியான வழி என்று அவர்கள் உணர்ந்தார்கள். தமிழிலோ உரைநடை வளம்பெற்று வளரவில்லை. அச்சு யந்திரமும் இங்கே பரவவில்லை. இந்த நிலையில் அவர்கள் தமிழில் வசன நடையில் எழுதலானார்கள். அச்சுச் சாலை நிறுவினார்கள். முதல் முதலாக அச்சிடப் பெற்ற தமிழ்ப் புத்தகம் பாதிரிகளின் புத்தகமே என்பது ஆச்சரியமாக இல்லையா?[1] 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெஷிப் பாதிரியார் கிறிஸ்து பெருமானின் கதையைக் காவியமாக எழுதினார். உரை நடையில் பலசமயப் பிரசார


  1. 1577-ஆம் ஆண்டில் கோண்ஸால்வ்ஸ் என்னும் பாதிரியார் அச்செழுத்துக்களை உண்டாக்கிக் கிறிஸ்துவ வணக்கம் என்னும் நூல் அச்சுப் புத்தகமாசு அச்சிட்டார் என்பர்.மயிலை, சீனி. வேங்கடசாமி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம். ப. 89.