பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தமிழ் நாவல்

இவை உண்மையாக நடக்கத் தக்கவை என்று நினைக்கும் கதைகளை யதார்த்தமான நாவல்கள் என்றும் பிரித்துச் சொல்வார்கள்.[1] இந்த இரண்டையும் பற்றி இனி நாம் பார்க்கப்போகிற பத்மாவதி சரித்திரத்தை எழுதிய அ. மாதவய்யா அந்த நாவலின் முகவுரையின் தொடக்கத்திலே பின் வருமாறு சொல்கிறார்: “நாவல் என்ற ஆங்கிலச் சொல்லும் 'கவீனம்' என்ற வடமொழிப் பதமும் ஒரே தாதுவினின்றும் பிறந்து, ஒரே பொருளைத் தரும் வார்த்தைகளாம். முதற்கண் புதுமையையே குறித்த ஆங்கிலச் சொல் வழக்க விசேஷத்தால் அசாதாரணத்தையும் வியப்பையும் குறித்து நிற்றலுமன்றி, வியப்பைத் தரும். நூதனக் கட்டுக் கதையாகும் ஒருவிதக் கிரந்தத்துக்குக் காரணப்பெயராகவும் வழங்குகின்றது, இவ்விதக் கிரந்தங்களில்அசாதாரண அற்புத சம்பவங்களே மிகுந்துள்ளவற்றை, 'உரோமான்ஸ்' என்றும், உலக வாழ்க்கையைக கண்ணாடிபோற் பிரதிபலித்துப் பெரும்பாலும் அநுபவத்தோடு ஒத்து நிகழும் கதைகளை 'நாவல்' என்றும் மேல் நாட்டார் கூறுவர்" என்கிறார். அவர் பிரதாப முதலியார் சரித்திரத்தை, 'அதிகப் பயன்படாமை கருதி மேல் நாட்டாரால் சிறுபான்மையே கையாளப்படும். உரோமான்ஸ் வகுப்பைச் சேர்ந்தது'[2] என்பர். ரொமான்ஸை அற்புத நவீனகம் என்றும், நாவலை இயற்கை நவீனகம் என்றும் சொல்வர்[3] வையாபுரிப்பிள்ளை. புதினம் என்று நாவலை வழங்குவாரும் உண்டு.[4] இவற்றையெல்லாம் வசன காவியம் என்று வேதநாயகம் பிள்ளை குறிக்கிறார்.

ஆங்கிலத்திலுள்ள கட்டுரைகளையும் கதைகளையும் படித்தார் வேதநாயகம் பிள்ளை, அதன் பயனாகவே இந்த


  1. Arnold Kettle: An Introduction to the English Novel, p.28.
  2. அ. மாதவய்யா பத்மாவதி சரித்திரம், முகவுரை, ப. 2, 3
  3. எஸ். வையாபுரிப் புள்ளை பார்த்திபன் கனவு, முன்னுரை
  4. அ. ச. ஞானசம்பந்தன்; இலக்கியக் கலை, ப. 264.