பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ் நாவல்

குருஸ்வாமி சர்மா என்பவர். தமிழ்நாட்டுக் குடும்பத்தை நிலைக்களமாகக் கொண்டு எழுதின கதை அது.![1] 'இது பல காரணங்களால் நாவல் என்ற பெயருக்கு ஏற்றது அன்று[2] .என்று அ. மாதவய்யா எழுதியிருக்கிறார்.

அக்காலத்தில் ஸி. வி. ஸ்வாமிநாதையர் என்பவர் சென்னையில் விவேக சிந்தாமணி என்ற மாதப் பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் சில நாவல்கள் தொடர் கதைகளாக வந்தன. அதன் முதல் தொகுதியில் அ. மாதவய்யா சாவித்திரி சரித்திரம் என்ற நாவலை எழுதினார். ஆனால் அது முற்றுப் பெறவில்லை.[3] பின்பு 1893-ஆம் ஆண்டில் பி, ஆர். ராஜமையர் கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவலை அதில் எழுதத் தொடங்கினார். 1895-ஆம் ஆண்டில் அது முற்றுப்பெற்றது. பின்பு 1896-ஆம் ஆண்டில் அது புத்தக வடிவில் வெளியாயிற்று. ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்ற இரட்டைத் தலைப்பை அது முதலில் பெற்றிருந்தது.[4]

ராஜமையர் வத்தலக்குண்டு என்னும் ஊரில் பிறந்தவர். 26 ஆண்டுகளே வாழ்ந்திருந்தார். வேதாந்த நூல்களைப் படித்து விரக்தி மனோபாவத்துடன் இருந்தவர். பிரபுத்த பாரதம் என்ற ஆங்கில வேதாந்தப் பத்திரிகையின் முதல் ஆசிரியர் அவர்[5] தம்முடைய அநுபூதி யார்வத்தை இந்த நாவலின் இறுதியில் கதையோடு இணைத்து வெளியிட்டிருக்கிறார். இதைப்பற்றிப் பின்னால் விரிவாகப் பேசுவதாக எண்ணியிருக்கிறேன்.

..


  1. தமிழ் நூல் விவர அட்டவணை, முதல் தொகுதி, இரண்டாம் பகுதி. 1, 815.
  2. பத்மாவதி சரித்திரம், முகவுரை, 1, 2.
  3. பத்மாவதி சரித்திரம், முகவுரை, 1, 2.
  4. தமிழில் நூல் விவர அட்டவணை, ப. 212
  5. ஏ. எஸ், கஸ்தூரிரங்கய்யர்: ராஜம் அய்யர் சரிதை, ப. 32