பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

23

பண்டித ச. ம. நடேச சாஸ்திரியார் என்பவர் தமிழிலும் ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வல்லவராக இருந்தார். அங்கங்கே வழங்கும் நாடோடிக் கதைகளைத் தெரிந்து தொகுத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். வால்மீகி ராமாயணத்தை அவர் மொழி பெயர்த்திருக்கிறார். ஆங்கில நாவல்களைத் தழுவிச் சில நாவல்களை எழுதியிருக்கிறார், துப்பறியும் கதையாகிய தானவன் என்பதை 1894-ஆம் ஆண்டு வெளியிட்டார்.[1] 1900ஆம் ஆண்டு தீனதயாளுவை எழுதினார்.[2] 1902-இல் திக்கற்ற இரு குழந்தைகள் என்ற நாவலையும், 1903-இல் மதிமகட்ட மனைவி, என்பதையும் அவர் எழுதினார்.[3] 1896-இல் வி. நடராஜ ஐயர் என்பவர் ஞான பூஷணி என்ற கதையை எழுதினார்.[4] கிருபை சத்தியநாதன் என்ற அம்மையார் 1896-இல் கமலம் என்ற கதையை எழுதினார்.[5] டி. எஸ். துரைசாமி ஐயர் என்பவர் 1897-இல் குணபூஷணி என்னும் கதையையும்,[6] 1900ஆம் ஆண்டில் கோபால கிருஷ்ணையர் என்பவர் குணசீலன் என்னும் கதையையும்[7] எழுதினார்.

இவற்றையன்றி வேறு சில கதைகளும் அக்காலத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மேலே சொன்ன நாவல்களில் கமலாம்பாள் சரித்திரத்தைத் தவிர மற்றவை இலக்கிய மதிப்புடையவை என்று சொல்வதற்கு உரியன அல்ல. அரசர்களின் வீர, தீர பராக்கிரமத்தைச் சொல்லிப் படிப்பவர்களை ஆச்சரியம் அடையச் செய்ய முயல்வன சில. பெண்ணின் பெருமை


  1. தமிழ் நூல் அட்டவணை, ப. 822.
  2. தமிழ் நூல் அட்டவணை, ப. 820
  3. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், ப. 250.
  4. தமிழ் நூல் அட்டவணை, ப. 821
  5. தமிழ் நூல் அட்டவணை, ப. 814
  6. தமிழ் நூல் அட்டவணை, ப. 821
  7. தமிழ் நூல் அட்டவணை, ப. 815