பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தமிழ் நாவல்

ஏற்பட்டுக் கையாளப்படுகின்றனவேனும், கடைசி ஐம்பது வருஷங்களாகவே மிகப் பரவிச் செழித்தோங்கியுள்ளன. இவ்விதக் கிரந்தங்கள் தற்காலத்திலே ஆண்டாண்டு தோறும் ஆயிரக்கணக்காகப் பிரசுரிக்கப் படுவதுமன்றி, பெயர்போன நாவலர்களால் இயற்றப்படும் நாவல்கள் வெளியாகிச் சில மாதங்களுக்குள், பதிப்புக்குப் பல்லாயிரம் பிரதிகொண்ட பல பதிப்புக்கள் விலையாகி விடுகின்றன'[1] என்று பத்மாவதி சரித்திரத்தின் முகவுரையில் எழுதுகிறார். அவற்றின் இலக்கிய மதிப்பைப்பற்றி அவர் சொல்கிறார்: பொழுது போக்குவதற்குரிய ஒரு சில்லறைப் பிரபந்தமாக இதை மதித்து இகழாது, அதி மேதாவிகளும் கவீந்திரருமான வித்வ சிரோமணிகளும்கூட இவ்விதக் கிரந்தங்கள் இயற்றிப் புகழ் பெறுகின்றனர். கற்புக்கு அருந்ததி, வாய்மைக்கு அரிச்சந்திரன், பொறுமைக்குத் தருமபுத்திரன், சினத்துக்குத் துருவாச முனி என்று பல புராணக் கதைகள் நம்மவர் மனத்திற் படிந்து கிடந்து பழமொழிகளாகப் பண்டிதராலும் பாமரராலும் வழங்கப்படுவதுபோல், பெயர் பெற்ற நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள், மேல் நாட்டாருள் பேச்சு வழக்கிலும் உயர் தரக் கிரந்த வழக்கிலுங் கூடச் சாதாரணமாய்க் கையாளப் படுகின்றமையும், இந்நாட்டிலும் பிற நாடுகளிலும் பிரயாணிகளுக்காக ரயில்வே ஸ்டேஷன்களிலே வைக்கப்படும் புத்தகசாலைகளில், நாவல்களே பெரும்பாலும் வைக்கப்பட்டு விலையாகின் றமையும் இவ்விதக் கிரந்தங்கள் மேல் நாட்டாரால் எல்வளவு படித்து அநுபவிக்கப்படுகின்றன என்பதை நன்கு உணர்த்தும்.[2]

புராணக் கதைகளும் காவியங்களின் வசன வடிவமுமே. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் கதைகளாக வழங்கி வந்தன என்பதை அவர் அந்த முகவுரையில் குறித்திருக்கிறார்;


  1. அ. மாதவய்யா; , முகவுரை, ப, 1.
  2. , ப. 1-2