பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

27

'வசன நூல்களே மிக அருமையான நமது தமிழ்ப் பாஷையில் ஆங்கில நாவலுக்குச் சமமான வசன இரம் தங்கள் முன்பு ஒன்றேனும் இல்லை. புராணக் கதைகளைச் சுருக்கியும் விரித்தும் வசன நடையில் எழுதப்பட்டுள்ள சில கிரந்தங்களும், தசகுமார சரித்திரம் போன்ற மொழி பெயர்ப்புகளும் தமிழ் நாவல்கள் ஆகா' என்று சொல்கிறார். 'யான் அறிந்த வரை அப் பெயர்க்குச் சிறிதேனும் தக்க கிரந்தங்கள், முதல்முதல் வெளிப் போந்தன, பிரேம் கலாவத்யமும் பிரதாப முதலியார் சரித்திரமுமே' என்று முன்னோடிகளைப் பற்றி எழுதுகிறார். உடனே அவ்விரண்டை பற்றிய தம் கருத்தையும் சொல்லி விடுகிறார்; 'இவற்றுள் முன்னது பல காரணங்களால். அப்பெயர்க்கு நன்கு ஏற்றதன்று; பின்னது அதிகப் பயன் படாமை கருதி மேல் நாட்டாரால் சிறுபான்மையே கையாளப்படும் உரோமான்ஸ் வகுப்பைச் சேர்ந்ததாம்' என்று அவர் சொல்வதை முன்பே பார்த்தோம்.

இவ்வாறு 1876-இல் தொடங்கிய நாவல் பலருடைய முயற்சியால் கதையையே முக்கிய அம்சமாகக் கொண்டு வளர்ந்து வந்தது. 1896-இல் நாவல் என்று சொல்வதற்குரிய . அமைப்பு முறையும் இலக்கிய மதிப்பும் உடைய கமலாம்பாள் சரித்திரமும் 1900-இல் அந்தச் சிறப்புக்கேற்ற பத்மாவதி சரித்திரமும் வெளிவந்து இந்த இருபத்தைந்து ஆண்டுகளின் இடையே ஒளிவிட்டுச் சுடரும் விளக்குகளாக நிற்கின்றன.


பரபரப்பு நாவல்கள்

தற்கு அப்பால் தோன்றிய நாவல்களைப்பற்றி இனிப் பார்க்கலாம். அவற்றை ஒருவாறு மூன்று பகுப்பாகப் பிரிக்கலாம். பொழி பெயர்ப்பும் தழுவலுமாகிய