பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

29

ரவர்கள் ரைனால்ட்ஸ் நாவல்களையும், மற்ற மர்மக் கதைகளையும், கொலை, கொள்ளை, துப்பறிதல் ஆகியவற்றைச் சொல்லும் கதைகளையும் அவர் மொழிபெயர்த்தார். அவருடைய மொழிபெயர்ப்புத் தெளிவாக இருந்தது. படித்தால் கதையோட்டத்தோடு மனம் செல்லும்படி அமைந்திருந்தது. அதனால் அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கிப் படித்தனர். மாணவர்கள் மிகுதியாகப் படித்து இன்புற்றனர்.

ரைனால்ட்ஸ் ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதிய நாவல்களை அவர் சுருக்கினார். அப்படியப்படியே பல பகுதிகளை மொழிபெயர்த்தார். பெயர்களை மட்டும் மாற்றினார். அமரசிங்கம் பிரபு, அமராவதி சீமாட்டி என்று தமிழைப் போலத் தோற்றும்படி மாற்றினார், ஊர்ப்பெயர் களை இரத்தினபுரி, சிங்கபுரி என்பவை போல மாற்றினார். அவ்வளவுதான், மேல் நாட்டு நாகரிக வாழ்க்கையையும், வழக்கங்களையும் மூல நாவல்களிலுள்ளபடியே மொழி பெயர்த்து வைத்தார். இடையே அவராகச் செய்த காரியம் ஒன்று உண்டு. கதைக்கு நடுவில் ஆசிரியர் வந்து நிற்பார். 'வாசகர்களே, பாருங்கள் மேல் நாட்டு நாகரிகத்தின் தீமையை; கல்லென்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்னும் பாரதநாட்டுப் பெண் மணிகளின் கற்புக்கும் இந்த மேல் நாட்டு நாகரிக மங்கையர்களின் போக்குக்கும் எத்தனை வேற்றுமை பருவம் வந்த ஆண்களையும் பெண்களையும் மனம்போலப் பழக விடுவதனால் வரும் தீமைகளைப் பாருங்கள். வேண்டாமென்றால் விவாகரத்துப் புரிந்து கொள்ளும் உரிமையினால் உண்டாகும் ஆபாசங்களைச் சிந்தியுங்கள்' என்று ஒரு சொற்பொழிவே செய்துவிடுவார். இலக்கிய மதிப்புள்ள பல ஆசிரியர்களுடைய நாவல்களை அவர் மொழி பெயர்த்துத் தந்திருந்தால் ஒரு வகையில் உபகாரமாக இருந்திருக்கும். - மனிதனுடைய கீழ்த்தர